கால் என்றால் கேவலமானதா?

❓❓❓❓❓❓❓❓❓❓❓

*கால் என்றால்*
*கேவலமானதா ?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❓❓❓❓❓❓❓❓❓❓❓

'கைப்பட்டால்'
கண்டு கொள்ளாமல்
போகும் நீங்கள்
'கால் பட்டால்'
"தொட்டு கும்பிட வேண்டும்" என்று
சொல்கின்றீர்கள்
'கால் என்றால் கேவலமானதா?'

"காலில் விழுந்து
மன்னிப்பு கேள்" என்று
சொன்னால்
அவனுக்கு உதிரமெல்லாம்
கொதிக்கின்றதே!
கால் என்றால் இழிவானதா?

எதுவும் சொல்லாமல்
மௌனம் சாதிக்கின்றீர்
எப்படி சொல்வீர்கள் ?
அதுதான் ஏற்கனவே
எழுதி வைத்து விட்டார்களே!
'முகம் கைகள் தொடைகளில்' பிறந்தவர்கள்
'உயர்ந்தவர்கள்' என்றும்
'கால்களில்' பிறந்த சூத்திரர்கள்
"தாழ்ந்தவர்கள்' என்றும்
இதற்கு மேல்
என்ன வேண்டும்....?

எண்ணில் பிறந்த
சூத்திரர் தாழ்ந்தவர்கள் என்றால் நானும் தாழ்ந்தவன் தானே !
அப்படி என்றால்
'என்னையும் வெட்டி
வீச வேண்டியதுதானே !''
ஏன் என்னோடு வாழ்கின்றீர் ?

நான் இல்லை என்றால்
மலம் ஜலம் கழிக்க முடியாமல்
'நீங்கள்
நாற்றமெடுத்து விடுவீர்' என்று
உங்களுக்கும்
நன்றாகவே தெரியும்...!

"இன்னாசெய் தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்" என்று
உங்களுக்கு
அதைப் படிக்கத்தான் தெரியும்
எனக்கு
அதன் படி வாழவே தெரியும்...!

'காதலுக்கு வேண்டுமானால்
கண் கை இதயம்'
முக்கியமானதாக இருக்கலாம்...
ஆனால்
'சுபகாரியமான
கல்யாணத்திற்கு'
நான்தான் முக்கியம்....

பெற்றோர்களின்
"கால்களைக் கழுவி"
பாதபூஜை
செய்தாக வேண்டும் தெரிந்ததா?

தாலியைக்
கழுத்தில் கட்டினால் மட்டுமல்ல
"மெட்டியைக்
காலில் போட்டால் தான்
கல்யாணமே
பூர்த்தியாகும்" புரிந்ததா ?

எதற்கும்
ஈடு இணையற்ற
"ஆசிர்வாதத்தை"
பெற வேண்டுமானால்
"எவனாக இருந்தாலும்
என்னை தொட்டு
வணங்கித்தான் ஆகவேண்டும்
குனிந்து
என்னைக் கும்பிட்டுத்தான்
ஆக வேண்டும் ....!".

முகம் அது
'முகமூடி ' போட்டுக் கொண்டே
அலைகிறது எப்பொழுதும் ...

கைகள்
'புண்ணியங்களை விட
பாவங்களையே!'
அதிகம் செய்கிறது
தொடை அது என்றுமே !
'மூடிய கடை ...!'

இப்போது
நீங்கள் சொல்லுங்கள்
எதில் பிறந்தவன்
"உயர்ந்தவன்" என்று..?

ஏய்...! சூத்திரர்களே !
"எண்ணில் பிறந்ததற்காக
நீங்கள்
பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் ..!"

இந்தக் கவிதையைப் படித்தும் உங்களுக்குக்
காலின் அருமை
புரியவில்லை என்றால்
கால் இல்லாதவனைத்
தேடிப்


*கவிதை ரசிகன்*

❓❓❓❓❓❓❓❓❓❓❓

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-May-24, 6:42 pm)
பார்வை : 30

மேலே