ஒரே குரலாய்

போதைப்பொருள்,
வன்புணர்வு,
உறுப்புத் திருட்டு,
ஆள்கடத்தல்,
உடல் பருமன்,
கொடிய நோய்களென
எந்தவொரு பயமின்றி
சிறுவர் கூட்டம்
மனைவிட்டு
வெளியே
நிம்மதியாய்
பட்டாம்பூச்சியாய்
என்று பறக்கிறதோ
அன்றே
அந்த நாடு
சுதந்திர நாடேன்பேன்..

நாமனைவரும்
இரசித்து வாழ்ந்த,
இன்றும் எண்ணவோட்டத்தில் நினைவலைகளாய் மகிழ்ச்சியை அள்ளித்தந்து
இன்புற்று வாழ உந்துகோளாய்
அமைந்த இளம்பருவத்தை இழக்கும்
ஒவ்வொரு சிறுவர்களின்
மனக்குமுறல்கள்
*ஒரே குரலாய்*...
உள்ளேயே இரு
என்றதும்
அவர்களின்
ஏங்கிய விழிகளில்
பிரதிபலிக்கும்போது
மனங்கசக்குதய்யா!

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (25-Jun-24, 10:05 am)
சேர்த்தது : dkmalathi
Tanglish : ore kuralaay
பார்வை : 27

மேலே