விமானமும் நானும்

ஜன்னல் இருக்கைதான் வேண்டுமென
போட்டிப்போட்டு கொண்டதைச் சொல்லவா?

பாலிக்குப் பறந்த நாங்கள்
பலியாக இருந்த தருணத்தைச் சொல்லவா?

விமானம் கண்டபடி
குலுங்கிச் சென்றதைச் சொல்லவா?

பயத்தில்
அனைவரும் ஒருசேர
இறைவனை வேண்டியதைச் சொல்லவா?


மழை, இடியென
மேகக்கூட்டத்தினிடையே
இலாவகமாய் விமானஞ்செலுத்தி
பாதுகாப்பாய் தரையிறக்கிய
விமானியின்
திறமையைச் சொல்லவா?

தரையிறங்கியதும் உயிரைக் காத்த
விமானிக்கு அனைவரும் நன்றி சொல்கையில்
நான் மட்டும்
இரசித்த அவரழகைச் சொல்லவா?

முதல் பயணம்
உயிர் பயம் தந்தாலும்
இப்பொழுதெல்லாம்
பயணித்தால் 'ஏரோப்லேன்'தான்
என்று தயக்கமின்றி பயணிக்கிறேன்
அவ்விமானி கொடுத்த நம்பிக்கையை வைத்து..

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (25-Jun-24, 10:07 am)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 38

மேலே