கண்ணீர் பூக்கள்

பெருங்கனவோடு
மண வாழ்க்கையில்
காலடி எடுத்து வைக்கும்
தேவதைகள்
மணாளனிடத்தில்
நாளடைவில்
தோய்ந்து போகும்
அன்பினால்
உடைந்தே போகும் தருணம்..

பிள்ளைகளும் கணவனும்
திறன்பேசியில் மூழ்குகையில்
இவர்களுடன்
பேசப்
போராடிப் போராடி
பெருந்தனிமையில்
மூழ்கும் கண்ணீர் பூக்களாய்
இன்றும்
பல இல்லங்களில்
பலர்...

வாழ்நாள் துணை என்றுநினைத்தே
மணம்புரியும்
பெண்கள்
அனைவரும் சூழ்ந்திருந்தும்
அனாதையாக வாழ்வதற்கு
'90ஸ் கிட்ஸ்' போலே
இனிய தனிமையில்
வாழ்ந்திருக்கலாம்..

இதில் பாவப்பட்ட
ஜென்மங்களான,
திருமணத்திற்காக
காத்திருக்கும்
பெண்களிடத்தில்
வந்து
தத்தம் மண வாழ்க்கையின் சோகத்தைச்
சொல்லுகையில்
திருமணத்தின் மீது
மரியாதை நீங்கி
பயவுணர்வே மேலிடும் வேளை..

அப்பெண்களிடத்தில்
யார் அன்போடு நெருங்கினாலும்
எதுக்கு வம்பென
தனி வாழ்க்கையே
சிறந்த வாழ்க்கையென இருக்கவே
எத்தனித்து
மண வாழ்க்கையைத் தீண்டாமல்
பெருந்தனிமையில்
கண்ணீர் பூக்களாய்
பலர்..

வரும் போதும் தனியாக வந்தாய்..
போகும்போதும்
தனியாகத்தான் போகவேண்டும்
என்பதை
இறை
அவ்வப்போது காட்டிச் செல்கிறான்
புன்னகையோடு..

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (25-Jun-24, 10:03 am)
சேர்த்தது : dkmalathi
Tanglish : kanneer pookal
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே