90ஸ் கிட்ஸ்

மாலதி தேசிகாமணி

இளம்
மணமக்களை
வாழ்க வாழ்கவென
வாழ்த்த
குடும்பம் குடும்பமாய்
ஏறி
புகைப்படமெடுத்து
கொண்டிருக்கையில்..

ஓர் ஓரமாய்
மணமக்களின் பெற்றோர்களின் கையில்
திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்தப் பரிதாபமான
மொய்கள் சொல்லும்..

தங்களை அப்படித் திணித்தவன்
சிரித்த முகத்தின்
பின்னே
மறைக்க முயலும்
மன ஏக்கத்தின்
கண்ணீர்த்
துளிகளினை..

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (25-Jun-24, 10:02 am)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 38

சிறந்த கவிதைகள்

மேலே