கண்ணதாசனுக்கு ஒரு பாமாலை

கவிஞரின் பிறந்த நாள் இன்று 24.06.2024

குழந்தைகளுக்கு நீதி போதனை சொன்ன நீதிதாசன்
வளர்ந்தவர்க்கு அனுபவப்பாடம் தந்த அனுபவதாசன்
காதல் பாடல்களுக்கு மெருகு ஏற்றிய காதல்தாசன்
பாச மலர்களுக்கு அன்பு நீர் பாய்ச்சிய பாசதாசன்
குடும்ப உறவுகளை சேர்த்து வைத்த கூட்டுதாசன்
துணிவையும் ஊக்கத்தையும் அளித்த ஊக்கதாசன்
சாதி சமய ஒற்றுமையை பறைசாற்றிய தேசியதாசன்
தத்துவங்களை கோர்த்து அழகு பார்த்த தத்துவதாசன்
பக்தியின் ஆழத்தில் நல்முத்துக்களெடுத்த பக்திதாசன்
ஆன்மீகத்தை அறிந்து புரிந்து, தெளிந்த ஆன்மீகதாசன்
கருவறை முதல் கல்லறை வரை பாடிய பூஜ்ஜியதாசன்
எம்எஸ்வியை டிஎம்எஸ்ஸை உயர்த்திய உயர்ந்ததாசன்
இந்து மதத்தின் சிறப்பை அறிவித்த அர்த்தமுள்ளதாசன்
தான் கெடினும் பிறர் வாழணும்-அதுதான் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் 54 வயதே வாழ்ந்தாலும் அவர் நமக்கு அளித்துச்சென்ற கருத்துக்களும் தத்துவங்களும் எவ்வளவோ!
அன்னாரின் பிறந்தநாளான இன்று, அவருடைய சேவையை போற்றி
அவரது அருமையான பாடல்களை நினைவு கூர்ந்து நெகிழுவோம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-24, 6:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே