அந்தக்காலம் இந்தக்காலம்
1. அஞ்சு வயசுல ஸ்மார்ட் போன் வாங்காதவன்
அம்பது வயசுல டப்பா போன் கூட வாங்கமாட்டான்
2. இயற்கை, இறைவனின் அழகிய கலை கண்காட்சி
செயற்கை, நமது நேரம்கொல்லி தொலைக்காட்சி
3. கடுமையான உழைப்பு குறைவான பேச்சு அது அந்தத் தலைமுறை
கடுகடுவென்று பேச்சு குறைவான உழைப்பு இன்றைய தலைமுறை
4. பிறர் நலத்தை நினைப்பான் அந்நாளில் மாணிக்கம்
பிறர் நலத்தை கெடுப்பான் இந்நாளில் வெல்கம்
5. மனிதனுக்கு பயமூட்ட அக்காலத்தில் பேய் பிசாசு
உடல் எடை கூட்ட இக்காலத்தில் பிஜ்ஜாவுடன் சாசு
6. குழந்தைக்கு சோறூட்ட அன்று ஒரு பெண் எடுத்தாள் பிச்சை
தானுண்ண, இன்று ஒரு பெண் அவள் குழந்தை மூலம் பிச்சை