மீண்டும் மீண்டும்

இளவேனிற்பொழுதில்
இதமாய்,
இளஞ்சுடாய்,
இதயமிறங்கிய
காதல்..

முதுவேனிற்பொழுதில்
முரணாய்,
மழையாய்,
முத்தங்கள் நனைத்த
காதல்..

கார் பொழுதில்
கதிரவனாய்,
வெயிலாய்,
கன்னங்கள் உரசிய
காதல்..

இலையுதிர் பொழுதில்
சருகாய்,
தனியாய்,
இதயங்கள் உதிர்ந்த
காதல்..

மீண்டும்
இளவேனில்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (16-Nov-15, 2:20 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 63

மேலே