மீண்டும் மீண்டும் -2

நாளொன்று அடுத்த
நாளுக்கு மங்கும்
சூரியனைத் தருகிறது

இரவொன்று பின்வரும்
இரவுக்காய் ஏங்கி
இரவினில் அழுகிறது

கோடைக்குப் பின்னே
கோடையதுவும் வாடைக்கு
வழி விடுகிறது.

இந்தப் பூவுலகும்
புரியாத துயரத்தில்
பாடலை இசைக்கிறது.

நாளை நாம்
உறுதியாய் இறப்போம்
நமக்குள் உள்ள
இவ்வுலகம் அழியும்

நாளது அடுத்த
நாளுக்கு அளிக்கும்
சுட்டிடும் சூரியனை

இரவுக்குப் பின் இரவு
தாரகை ஒளி பொழியும்

இவ்வுலகில் வாழ்வோர்
கவிதையும் சிலரது
உதட்டோடு நிற்கும்

ஏழு வழிகளில் பிரிந்து
ஒரு வழியில் திரும்பி
மரணமும் ஜனனமும்
மட்டுமே நடக்கும்
மீண்டும் மீண்டும்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (16-Nov-15, 2:13 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 60

மேலே