நதியே

நதியின் தியானத்தை
கலைக்க விரும்பாத
இலை அதன் போக்கில் போய்க்
கொண்டிருந்தது
புரிந்து கொண்ட எறும்பு
இலையில் அசையாமல்
நின்றிருந்தது
புகைப்படம் எடுத்து காட்சியை
நிறுத்தி விட விரும்பாத நான்
முடிந்த வரை பார்த்து கொண்டு
மட்டும் இருந்தேன்
அது தவமாக தெரிந்திருக்கலாம்
என் பின்னால் நின்றிருந்த மரத்துக்கு.
யாத்ரா