முருகேசன் சத்தியமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முருகேசன் சத்தியமூர்த்தி
இடம்:  Pudukkottai
பிறந்த தேதி :  20-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2013
பார்த்தவர்கள்:  137
புள்ளி:  113

என் படைப்புகள்
முருகேசன் சத்தியமூர்த்தி செய்திகள்

ஒரு
கையளவு
இதயம்,
இன்றேனோ
மலையளவு
கணக்கிறதே

மேலும்

பட்டாம்பூச்சிககள்
எல்லாம்
பணிமனையில்
தஞ்சம்
என்னவளின்
கண்சிமிட்டல்
சாயல் வேண்டி

மேலும்

உலகில்
இதுவரை
பூத்த
மஞ்சள் மலர்களுக்கெல்லாம்
சவாலாய்
- என்னவள்

மேலும்

யார் இவள்..

அன்னையின் சாயலாய்
என்னருகில் அமர்கிறாள்..

பிள்ளையின் கொஞ்சலாய்
என்னை பின் தொடர்கிறாள்..

அவள் விழி உருட்டி
என் இதயம் சுருட்டி போகிறாள்..

மௌன பேச்சுக்களால்
என் மௌனம் கலைக்கிறாள்..

மந்திர புன்னகையால்
என்னை தந்திரம் செய்கிறாள்..

யார் இவள்..

என் விரல்
கோர்க்கிறாள்..

என் குரல்
கேட்கிறாள்..

வண்ணங்களை
எனதாக்குகிறாள்..

வானம் அதை
எனதாக்குகிறாள்..

பட்ட மரத்தில்
காதல் பூ கொய்கிறாள்..

என்னை சொந்தமாக்கி
எனக்கு சொந்தமாகிறாள்..

யார் இவள்..

மேலும்

காற்றாய் என்னுள்
நுழைந்தவளே
காதல் கருவாய் என்னுள்
உதித்தவளே

என் இமைக்கதவுகளை
இடை மறிப்பவளே
என் இதயவீட்டில்
குடியிருப்பவளே

எதார்த்தங்களில் என்னுள்
திளைத்தவளே
எதிர்காலமாய் என்னுள்
முளைத்தவளே

பார்வை அம்புகளால்
சாய்த்தவளே
என் பசி,தூக்கம்
மாய்த்தவளே

உண்மைகள் காதல்
உணர்த்தியவளே
உணர்வே
அழகே

உறவெனும் வலையினிலே
உழன்றிடும் பெண்மயிலே
உண்மையை சொல்லிவிடு
உன் உள்ளத்தில் நான் என்று..

முட்களில் உறங்குகிறேன்
உன் மடியினில் ஏந்திகொள்
உன் முகம் பார்க்க ஏங்குகிறேன்
முழுநிலவாய் வந்துவிடு

அமைதியை தேடுகிறேன்
அருகினில் தோன்றிவிடு
மோட்சம் வேண்டுகிறேன்
என் மூச்சை நிறுத்த

மேலும்

நன்றி மச்சி.. 27-Mar-2017 10:02 am
சூப்பர் மச்சி.....I am impressed...... 25-Mar-2017 11:22 am

கறந்த பால் காம்பேராது
விழுந்த இலை கிளை சேராது
தொலைந்த காதல் மீண்டு வாராது
மீண்ட காதல் முதல் காதல் ஆகாது

மேலும்

தங்கள் பதிவிற்கு நன்றி தோழா.. 19-Oct-2016 10:30 am
நிச்சயம் இது தான் உண்மை 19-Oct-2016 10:25 am

வானம் தாண்டி
சிறகு விரிக்கிறாய்
உன் வாசம் தேடி
தினமும் பறக்கிறேன்

கடல் தாண்டி
காலம் கடத்துகிறாய்
உன் குரல் தேடி
நாளும் துடிக்கிறேன்

மலை தாண்டி
மலைக்க செய்கிறாய்
என் மார்போடு
நிறுத்த எண்ணுகிறேன்

அலை தீண்டி
ஆனந்தம் கொள்கிறாய்
உன் விரல் தீண்ட
விரதம் கொள்கிறேன்

ஆழ்கடலில் அரங்கேற்றம்
கொள்கிறாய்
என் அடி மனதில் அமர
ஏனோ மறுக்கிறாய்
விந்தை பெண்ணே..

என் கவிதை பயிர்கள்
வாடும் பொழுதெல்லாம்
உன் பிரிவுகள்,
உன் பிரிவுகள் மட்டுமே
சாரலாய்
தூரலாய்...

உன் பிரிவிலும்
நான் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு..
உன் அருகிலும்
நான் வாழ்கிறேன்
உன் நிழலோடு..

மேலும்

தங்கள் பதிவிற்கு நன்றி தோழரே.. 26-Apr-2016 2:06 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 1:10 pm
காதல் உலகில் நேரும் மாயங்கள் சொல்ல சொல்லச் தீராத மொழிகள் 26-Apr-2016 1:01 pm

நான் நடக்கும்
சாலைகளில் ,
எனை கடக்கும்
பேருந்துகளில்,
எதிர்நோக்கும்
பெண்களில்,
ஏமாற்றம் தரும்
கண்களில்,
இதழ்களை மறுக்கும்
கன்னங்களில்,
இமைகளை மறிக்கும்
எண்ணங்களில்,
காதல்
கவிதைகளில்,
கல்யாண
பேச்சுகளில்

மீண்டும் மீண்டும்
தொலைகிறேன்,
தீரா மேகங்களாய்
திரியும்,
உன் நினைவுகளில்..

மேலும்

உண்மை தான் தோழரே.. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. 06-Jan-2016 4:54 pm
ஒரு மனதில் சில நினைவுகள் ஆழமாக பதிந்த பின் அவை என்றும் மாற்றம் பெறாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 4:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

vinoth srinivasan

vinoth srinivasan

சென்னை
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sarvan

sarvan

udumalpet

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sarvan

sarvan

udumalpet
மேலே