யார் இவள்
யார் இவள்..
அன்னையின் சாயலாய்
என்னருகில் அமர்கிறாள்..
பிள்ளையின் கொஞ்சலாய்
என்னை பின் தொடர்கிறாள்..
அவள் விழி உருட்டி
என் இதயம் சுருட்டி போகிறாள்..
மௌன பேச்சுக்களால்
என் மௌனம் கலைக்கிறாள்..
மந்திர புன்னகையால்
என்னை தந்திரம் செய்கிறாள்..
யார் இவள்..
என் விரல்
கோர்க்கிறாள்..
என் குரல்
கேட்கிறாள்..
வண்ணங்களை
எனதாக்குகிறாள்..
வானம் அதை
எனதாக்குகிறாள்..
பட்ட மரத்தில்
காதல் பூ கொய்கிறாள்..
என்னை சொந்தமாக்கி
எனக்கு சொந்தமாகிறாள்..
யார் இவள்..