சொல்ல மறந்த கவிதை
💙💜💙💜💙💜💙💜💙💜💙
*நான் வைத்துக்*
*கொண்டேன்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💙💜💙💜💙💜💙💜💙💜💙
அவளின் நினைவாக
அந்த மண்பாதை
வைத்துக் கொண்டது
அவள் காலடி சுவடுகளை...
துடைத்ததன் நினைவாக
அந்தக் கைக்குட்டை
வைத்துக் கொண்டது
அவள் வேர்வை துளிகளை...
ஐஸ்கிரீம்
சாப்பிட்டது நினைவாக
அந்த ஐஸ்குச்சி
வைத்துக் கொண்டது
அவள் உமிழ்நீரை..
சூடியதன் நினைவாக
அந்தப் பூச்சரம்
வைத்துக் கொண்டது
அவளின் ஒற்றைக் கூந்தலை...
அவள் குடித்த நினைவாக
அந்த இளநீர்
வைத்துக் கொண்டது
அவளின் முத்தத்தை....
அவள் அமர்ந்த நினைவாக
அந்த சிமெண்ட் பெஞ்சி
வைத்துக்கொண்டது
பூச்சரத்திலிருந்து விழுந்த
ஒற்றைப் பூவை.....
அவளை
நேசித்ததின் நினைவாக
நான் வைத்துக் கொண்டேன்
கவிதைகளை
*கவிதை ரசிகன்*
💙💜💙💜💙💜💙💜🩵💜💙