தீரா மேகங்கள்
நான் நடக்கும்
சாலைகளில் ,
எனை கடக்கும்
பேருந்துகளில்,
எதிர்நோக்கும்
பெண்களில்,
ஏமாற்றம் தரும்
கண்களில்,
இதழ்களை மறுக்கும்
கன்னங்களில்,
இமைகளை மறிக்கும்
எண்ணங்களில்,
காதல்
கவிதைகளில்,
கல்யாண
பேச்சுகளில்
மீண்டும் மீண்டும்
தொலைகிறேன்,
தீரா மேகங்களாய்
திரியும்,
உன் நினைவுகளில்..