மோட்சம் வேண்டுகிறேன்

காற்றாய் என்னுள்
நுழைந்தவளே
காதல் கருவாய் என்னுள்
உதித்தவளே

என் இமைக்கதவுகளை
இடை மறிப்பவளே
என் இதயவீட்டில்
குடியிருப்பவளே

எதார்த்தங்களில் என்னுள்
திளைத்தவளே
எதிர்காலமாய் என்னுள்
முளைத்தவளே

பார்வை அம்புகளால்
சாய்த்தவளே
என் பசி,தூக்கம்
மாய்த்தவளே

உண்மைகள் காதல்
உணர்த்தியவளே
உணர்வே
அழகே

உறவெனும் வலையினிலே
உழன்றிடும் பெண்மயிலே
உண்மையை சொல்லிவிடு
உன் உள்ளத்தில் நான் என்று..

முட்களில் உறங்குகிறேன்
உன் மடியினில் ஏந்திகொள்
உன் முகம் பார்க்க ஏங்குகிறேன்
முழுநிலவாய் வந்துவிடு

அமைதியை தேடுகிறேன்
அருகினில் தோன்றிவிடு
மோட்சம் வேண்டுகிறேன்
என் மூச்சை நிறுத்திவிடு...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (27-Jan-17, 2:21 pm)
Tanglish : mootcham thedukiren
பார்வை : 106

மேலே