விந்தை பெண்ணே

வானம் தாண்டி
சிறகு விரிக்கிறாய்
உன் வாசம் தேடி
தினமும் பறக்கிறேன்

கடல் தாண்டி
காலம் கடத்துகிறாய்
உன் குரல் தேடி
நாளும் துடிக்கிறேன்

மலை தாண்டி
மலைக்க செய்கிறாய்
என் மார்போடு
நிறுத்த எண்ணுகிறேன்

அலை தீண்டி
ஆனந்தம் கொள்கிறாய்
உன் விரல் தீண்ட
விரதம் கொள்கிறேன்

ஆழ்கடலில் அரங்கேற்றம்
கொள்கிறாய்
என் அடி மனதில் அமர
ஏனோ மறுக்கிறாய்
விந்தை பெண்ணே..

என் கவிதை பயிர்கள்
வாடும் பொழுதெல்லாம்
உன் பிரிவுகள்,
உன் பிரிவுகள் மட்டுமே
சாரலாய்
தூரலாய்...

உன் பிரிவிலும்
நான் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு..
உன் அருகிலும்
நான் வாழ்கிறேன்
உன் நிழலோடு..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (26-Apr-16, 11:15 am)
Tanglish : vinthai penne
பார்வை : 78

மேலே