கனவு திறவோன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கனவு திறவோன் |
இடம் | : மெய்ஞானபுரம் |
பிறந்த தேதி | : 22-Jul-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 9 |
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகில் இருக்கும் மெய்ஞானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் கனவு திறவோன். தனது பள்ளிப்படிப்பை மெய்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் முடித்துவிட்டு, இளநிலை அறிவியல் படிப்பை நாசரேத் மர்காசிஸ் கல்லூரியிலும், முதுநிலைப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட அமெரிக்கன் கல்லூரியிலும் மேற்கொண்டவர். வேதியியலில் ஆராய்ச்சிப் படிப்பை (Ph.D.) கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முடித்தவர். நூற்றுக்கு மேல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதைப் பொழுதுபோக்காகச் செய்து வருபவர்.
வேண்டுகோள்
*
மரணத்தின் வாசலில்
நிற்கிறேன்
திறக்கவே வேண்டாமென்ற
வேண்டுகோளுடன்
*
கனவு திறவோன்
தூசி தேய்த்த தேகம்தான்
எங்களின் அடையாளம்
ஊசிப் போன உணவைதான்
எங்கள் நா சுவை காணும்..
தாலாட்டின்றி துயில் கொள்ளும்
கண்கள்
கேட்பாரின்றி களிம்பு கொள்ளாப்
புண்கள்
கேளிக்கையாக நகைத்துச் செல்லும்
ஆண்கள்
வேடிக்கையாக பார்த்துச் செல்லும்
பெண்கள்
வாடிக்கையாக நாங்கள் கொண்ட
சொத்து இவைகள் தான்..
உதவிக்கரம் நீட்டா உலகமே
உங்களால் எங்கள் வாழ்க்கை
வண்ணம் தீட்டா ஓவியமே..
துளிகளை சுமந்து கொண்ட
விழிகளும்
வலிகளை மணந்து கொண்ட
உயிர்களும்
வழக்கமாகிப் போனதெங்கள்
வாழ்விலே..
என்னசெய்வது பெற்றெடுத்து
பெயர்வைக்கா பேணிக்காக்கா
தாயின்றி அலையும் எனக்கும்
என் தங்கைக்கும் இச்சமூகம்
வைத்த பெயர
முன்னோர்களில்
முட்டாள்கள் சிலர்
மூட்டியிருக்கவேண்டும்
இன்னும்
அனையவேயில்லை
சா தீ
என் அப்பனும்
ஆத்தாளும் மட்டுமல்ல
என் பாட்டனும் முப்பாட்டனும்
கண்டதேயில்லை
கோவில் கருவறை
சாமி தரிசனம் வேண்டி நான் கோவிலில் நுழைந்துவிட்டதற்கு
கொடுக்கப்பட்டது
சவுக்கடி தண்டனை
மெல்ல ஆறிவிட்டது
சவுக்கடி பட்ட ரணம்
ஆனாலும் ஆற மறுக்கிறது
நீ கீழ் சாதி
என்ற சொல் சுட்ட என் மனம்
வேலைக்களைப்பினால்
நாவரண்டு
கையேந்தி
தாகம்
தீர்க்கிறாள் ஆத்தாள்
குவளை தொட்டு
நீர் அருந்த முடியாத நிலை
பாத்திரம் தொட்டால்
பட்டு விடுமாம் தீட்டு
என் மக்கள் உழுத வயலுக்கும்
இதழ்களில் மௌனம் தொடங்கி
இரு விழிகளில் கலவரம் தொடங்கி
இயல்பாய் இயங்கிய
என் இதயம் அடங்கி
நாவடங்கி
நான் அடங்கி
இருண்ட காலம் தொடங்கி
இன்றுடன்
இரண்டு ஆண்டுகள்..
அன்பே.!
நீ சிரிப்பதானால்.!
எனக்காக சிரி
நீ அழுவதானால்.!
என்னை நினைத்து அழு
நீ நேசிப்பதானால்.!
என்னை மனமார நேசி
நீ வெறுப்பதானால்.!
என்னை அடியோடு வெறு
எதுவானாலும் நீ என்பதற்குள்
நான் என்ற நினைவு அகலாமல்
பார்த்துக்கொள்ளடி என் காதலியே.!
நீ சாக்லெட் என்றால் நான் குழந்தை
நீ பணம் என்றால் நான் ATM கார்டு
நீ பிரியாணி என்றால் நான் வயிறு
நீ கவிதை என்றால் நான் கவிஞன்
நீ சாலை என்றால் நான் வாகனம்
நீ உயிர் என்றால் நான் உடல்
நீ நீ என்றால் நான் நான்
உன்னைப் பிடிக்காதா என்ன?
-கனவு திறவோன்
நீயும் நானும்
தனிமங்களாக
எத்தனை நாளைக்குத் தனித்திருப்பது?
இணைதல் இனிமையானது
ஈர்ப்பதும் எதிர்ப்பதும் சமமடையட்டும்
நீ எதையும் இழக்க வேண்டாம்
நான் எதையும் தர வேண்டாம்
இருவரும் பெறுவோம்
சகப் பிணைப்புடனாவது
சேர்மமாகச் சேர்ந்திருப்போமே!
- கனவு திறவோன்
அவள் வசிக்கும் தெருவில் நானிருக்கிறேன்
அவள் வசிக்கும் தெரு எனக்குப் பிடித்தது
அவள் வீட்டுக் கிராதிக் கதவு பிடித்தது
கதவுத் தாழ்ப்பாள் பிடித்தது
அவள் கைகள் தொடுவதனால்.
அவள் வீடு ஜன்னல் பிடித்தது
அதன் வழியே என்னைப் பார்த்ததனால்
ஜன்னலுக்குள் அவள் முகம் தெரிந்தது
முகம் பிடித்தது, முகத்தில் இரண்டு கண்கள் பிடித்தது
அவள் குயில் போன்ற குரல் பிடித்தது,
குரலில் பிறந்த பாடல் பிடித்தது
எனக்கும் பித்துப் பிடித்தது
இதுதான் காதல் என்பதோ!
My fair lady! என்ற ஆங்கிலப் படத்தின் முக்கியமான On The Street Where You Live பாடல் வரியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டது.
மழை மேகம்
*
கருப்பு என்றதும்
இல்லை வெள்ளை
என்று நிருபிக்கும்
மேகம்.
*
-கனவு திறவோன்
உனக்காக
வாசலில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
நீ
உள்ளே
இருக்கிறாய்
என்று உணராமல்
-கனவு திறவோன்
நண்பர்கள் (41)

காளியப்பன் எசேக்கியல்
மாடம்பாக்கம்,சென்னை

அமலி அம்மு
கிருட்டிணகிரி

செ செல்வமணி செந்தில்
சென்னை

அர்ஷத்
திருநெல்வேலி

ராகவி நைடிங்கேல்
தூத்துக்குடி
இவர் பின்தொடர்பவர்கள் (41)

சேகர்
Pollachi / Denmark

முதல்பூ
வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

காளியப்பன் எசேக்கியல்
மாடம்பாக்கம்,சென்னை
இவரை பின்தொடர்பவர்கள் (41)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

கேசவன் புருசோத்தமன்
இராமநாதபுரம்
