இதுதான் காதல் என்பதோ
அவள் வசிக்கும் தெருவில் நானிருக்கிறேன்
அவள் வசிக்கும் தெரு எனக்குப் பிடித்தது
அவள் வீட்டுக் கிராதிக் கதவு பிடித்தது
கதவுத் தாழ்ப்பாள் பிடித்தது
அவள் கைகள் தொடுவதனால்.
அவள் வீடு ஜன்னல் பிடித்தது
அதன் வழியே என்னைப் பார்த்ததனால்
ஜன்னலுக்குள் அவள் முகம் தெரிந்தது
முகம் பிடித்தது, முகத்தில் இரண்டு கண்கள் பிடித்தது
அவள் குயில் போன்ற குரல் பிடித்தது,
குரலில் பிறந்த பாடல் பிடித்தது
எனக்கும் பித்துப் பிடித்தது
இதுதான் காதல் என்பதோ!
My fair lady! என்ற ஆங்கிலப் படத்தின் முக்கியமான On The Street Where You Live பாடல் வரியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டது.