ஹெல்மெட்

மாசு மருக்கள் வராது காக்கும்
கைகுட்டை முகமூடிகள்
இனி தேவையில்லை
'மாஸு' என நினைத்து போடும்
கூலர் கண்ணாடிகள்
இனி தேவையில்லை
கெத்து காட்டும் ஹீரோக்களின் முகங்கள் மறைகிறது தலைகவசப் பெட்டிக்குள்
வேகம் இனி தேவையில்லை
காசு பாக்க போகிறது கரை படிந்த காக்கி சட்டைகள்
பஞ்சம் இனி அவருகில்லை

கிடங்குகளில் அணிவகுப்பு நடத்திய ஹெல்மட்கள்
வீதிகளை பார்க்கட்டும்
இறுதிசடங்குகள் நடத்திகாட்டிய விபத்துகளின்றி
தமிழன் தலைகாக்கட்டும்


-NBR

எழுதியவர் : NBR (இராஜேந்திரன் புவன்) (29-Jun-15, 10:50 am)
Tanglish : helmet
பார்வை : 499

மேலே