சகப் பிணைப்பு
நீயும் நானும் 
தனிமங்களாக
எத்தனை நாளைக்குத் தனித்திருப்பது?
இணைதல் இனிமையானது 
ஈர்ப்பதும் எதிர்ப்பதும் சமமடையட்டும்
நீ எதையும் இழக்க வேண்டாம் 
நான் எதையும் தர வேண்டாம் 
இருவரும் பெறுவோம் 
சகப் பிணைப்புடனாவது 
சேர்மமாகச் சேர்ந்திருப்போமே!
- கனவு திறவோன்
 
                    
