நானும் என் தங்கையும்
தூசி தேய்த்த தேகம்தான்
எங்களின் அடையாளம்
ஊசிப் போன உணவைதான்
எங்கள் நா சுவை காணும்..
தாலாட்டின்றி துயில் கொள்ளும்
கண்கள்
கேட்பாரின்றி களிம்பு கொள்ளாப்
புண்கள்
கேளிக்கையாக நகைத்துச் செல்லும்
ஆண்கள்
வேடிக்கையாக பார்த்துச் செல்லும்
பெண்கள்
வாடிக்கையாக நாங்கள் கொண்ட
சொத்து இவைகள் தான்..
உதவிக்கரம் நீட்டா உலகமே
உங்களால் எங்கள் வாழ்க்கை
வண்ணம் தீட்டா ஓவியமே..
துளிகளை சுமந்து கொண்ட
விழிகளும்
வலிகளை மணந்து கொண்ட
உயிர்களும்
வழக்கமாகிப் போனதெங்கள்
வாழ்விலே..
என்னசெய்வது பெற்றெடுத்து
பெயர்வைக்கா பேணிக்காக்கா
தாயின்றி அலையும் எனக்கும்
என் தங்கைக்கும் இச்சமூகம்
வைத்த பெயர் "அனாதையாம்"...
செ.மணி