ரேணுசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரேணுசேகர்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  02-Feb-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Apr-2015
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிகிறேன். தமிழின் மேல் ஆர்வம் உண்டு. புத்தகங்கள் வாசிப்பது பிடிக்கும்.

என் படைப்புகள்
ரேணுசேகர் செய்திகள்
ரேணுசேகர் - ஹுமேரா பர்வீன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2018 7:36 pm

கவிதைக்கு எப்படி கவிதை என்று பெயர் வந்தது? இதற்கான வரலாறு தெரியுமா ?
தெரியவில்லை என்றாலும் நீங்க்கள் நினைப்பதை பதிவு செய்யுங்க்கள் கவிகளே!

மேலும்

கருத்திற்கு நன்றி 15-Jan-2018 8:31 am
கருத்திற்கு நன்றி 12-Jan-2018 6:40 pm
க(வி)தை : கவிதை சமூகத்திற்கு ஒரு விதையாகவும் இருக்க வேண்டும் அதில் ஒரு கதையும் (பாடம்) இருக்க வேண்டும். 12-Jan-2018 2:45 pm
நன்றி தோழமையே ! 12-Jan-2018 1:11 pm
ரேணுசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 6:25 pm

சமீபத்தில் நடைபெற்ற அந்நிய முதலீடு மாநாட்டில், சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீடு தமிழ் நாட்டுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளர்கள். அது அந்நிய முதலீடோ உள்நாட்டு முதலீடோ முதலீடு என்றாலே லாப நோக்கில் செய்யப்படுவது தானே. இப்படி லாப நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க நாம், 'நாம்' என்றால் நமது அரசாங்கம் என்னவெல்லாம் செய்து தரவேண்டும் என்றால், முதலில் நிலம், பிறகு தடையற்ற மின்சாரம், அவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இன்ன பிற. அவர்கள் நிறுவனம் தொடங்குவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மைய அரசின் பசுமை தீர

மேலும்

நல்ல பதிவு கட்டுரை பகுதியில் பதிவு செய்யுங்கள். 12-Sep-2015 6:49 am
ரேணுசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2015 6:33 pm

'நாசமாய் போகட்டும்' என
நினைத்துக்கொண்டது,
தான் மேய்ந்த நிலத்தில்
கட்டிய வீட்டின்
கிரகப்ரவேசத்திற்கு
இழுத்து வரப்பட்ட பசு!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:25 am
ரேணுசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2015 6:28 pm

சமீபத்தில் நண்பரின் புதிய வீட்டின் குடிபுகு விழாவுக்கு சென்றிந்தேன். நண்பரின் உறவினர் ஒருவர், நண்பரிடம் 'ஏன் என் மகளையும் மருமகனையும் இந்த விழாவுக்கு அழைக்கவில்லை' எனக்கேட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தார். நண்பருக்கு அவர் இருந்த அலைச்சலில் என்ன சொல்வது என்றே தெரியாமல் கொஞ்சம் அமைதியாகவே அவரை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர் அடங்காமல் மனைவியை அழைத்துக்கொண்டு விழா முடியும் முன்னே புறப்பட்டு விட்டார். நான் வீட்டை சுற்றி பார்க்கும்போது கவனித்தேன். இத்தனை நாட்களாய் வீட்டை தாங்கிய முட்டுக்கொம்புகள் வீட்டின் பின்புறம் மறைவாக போடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ வந்த வாழை மரங்கள் இரண்டு வீட்டின் முன்னே கட்ட

மேலும்

ரேணுசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 5:23 pm

இரவலாய் வாங்கிய ஒளியுடன்
இரவில் மட்டுமே ஒளிரும்
நிலவுடன் உன்னை
ஒப்பிடுவதை
ஒப்பவில்லை என் மனம்
பகலிலும்
சுயமாக ஒளிரும்
சூரியன் நீ!

அன்று மட்டும் நீ
இருந்திருந்தால்
அமாவாசை இரவில்
முழு நிலவை கேட்டு
அம்மனை வேண்டியிருக்கமட்டார்
அபிராமிபட்டர்.

மேலும்

ரேணுசேகர் - ரேணுசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2015 10:37 am

94 தளிர்களை பலி கொண்ட கும்பகோணம் பள்ளியில் நடந்த கொடிய தீவிபத்தின் (16.7.2004) 11.ம் ஆண்டு நினைவு தினம் இன்று. அன்று இரவு கண்ணீருடன் எழுதியது.

மடலவிழ்த்து
மணம் வீச வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மறைந்த சோகம் தாக்கி
மண்ணுலகே விம்மியதே!

வாழ வேண்டிய
வாரிசுகளை நெருப்புக்கு
வாரிக்கொடுத்து விட்டு
வாடி நிற்கும் பெற்றோர் கண்டு
கருகிய அரும்புகள் கண்டு
கண்ணீரை கண்டறியாத
கண்களில் கூட குருதி வடிந்தனவே!

பாடம் படிக்கவென்று
பாடசாலை சென்ற
பச்சிளம் சிறார்களை
பலி கொண்டது தீ!
பாடம் கொண்டதா சமுதாயம்?
அக்னியின் அகோர பசிக்கு
அழகிய அரும்புகளா?

நெஞ்சங்களை கீறிய
நெருஞ்சிமுள்ளான நிகழ்வ

மேலும்

அந்த பிஞ்சுகளுக்கு, நாமும் நம் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து ,அஞ்சலியை 16-Jul-2015 3:19 pm
வலி நிறைந்த வரிகள் நன்று ........ 16-Jul-2015 12:41 pm
ரேணுசேகர் - கனவு திறவோன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 10:49 am

வேண்டுகோள்
*
மரணத்தின் வாசலில்
நிற்கிறேன்
திறக்கவே வேண்டாமென்ற
வேண்டுகோளுடன்
*
கனவு திறவோன்

மேலும்

என்றாவது ஒரு நாள் திறந்தே தீரும். 06-Jul-2015 4:30 pm
நல்ல வேண்டு கோள் ஆனால் நாம் இன்னும் விதியின் கயிற்றில் கட்டப் பட்ட ஒரு கைதியே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 1:02 am
வேண்டுகோள் ஏற்காத ஒரே இடம் ...நல்லாருக்கு 02-Jul-2015 3:31 pm
வேண்டுகோள் மட்டும்தான் நம் கையில்.. சிந்தனை சிறப்பு.. 02-Jul-2015 2:14 pm
ரேணுசேகர் - ரேணுசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2015 5:25 pm

அறுபதுகளின் ஒரு நாளைய
அடைமழையில்
புயல் காற்றினால்
புரட்டி போடப்பட்ட
எங்களின் ஓலைக்குடிசையின்
உள்ளிருந்த
உருப்படியான
உருப்படிகளை சுருட்டிக்கொண்டு
எனது குடும்பம் குஞ்சு குளுவான்களோடு
மணியக்காரரின் ,
மஞ்சு வீட்டில்
தஞ்சமடைந்தபோது
நினைத்தேன்
இப்படி ஒரு மழை
ஏன் பெய்கிறதென்று….

மஞ்சம்புல் வேய்ந்த
மண்சுவர் பள்ளியில்
படித்த போது
மழைக்காலங்களில்
கூரை மேலிருந்து
மனப்பாட செய்யுளின்
மேல் விழுமே ஒரு
மரவட்டை
அப்போது நினைத்தேன்
இப்படி ஒரு மழை
ஏன் பெய்கிறதென்று……

ஒற்றை ஈச்ச மரத்தில்
ஒண்டியாய் தூக்கனாங்குருவி
தொங்கும் கூடமைத்து
இரவின் இருள் போக்க
சே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே