சுய ஒளிக்காரி

இரவலாய் வாங்கிய ஒளியுடன்
இரவில் மட்டுமே ஒளிரும்
நிலவுடன் உன்னை
ஒப்பிடுவதை
ஒப்பவில்லை என் மனம்
பகலிலும்
சுயமாக ஒளிரும்
சூரியன் நீ!

அன்று மட்டும் நீ
இருந்திருந்தால்
அமாவாசை இரவில்
முழு நிலவை கேட்டு
அம்மனை வேண்டியிருக்கமட்டார்
அபிராமிபட்டர்.

எழுதியவர் : ரேணுசேகர் (21-Jul-15, 5:23 pm)
பார்வை : 52

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே