வின் ஞானம்
வின் ஞானம்
*** *******************************
கரு வின் ஞானம் உருப்பெற முனைந்திட
உரு வின் ஞானம் வெளிவரத் துடித்திடும்
குரு வின் ஞானம் சீடர்க்காய் துடிக்கையில்
திரு வின் ஞானம் மாலனைக் கவர்ந்ததே !
சிசு வின் ஞானம் தாயினை அணைத்திட
பசு வின் ஞானம் கன்றினைச் சார்ந்திடும்
கொசு வின் ஞானம் குருதியைக் குடிக்கவே
நெச வின் ஞானம் வலைதனை நெய்திடும் !
பரி வின் ஞானம் நேசமதை வளர்க்கவே
பிரி வின் ஞானம் சேர்க்கையைக் கோருமே
உற வின் ஞானம் சந்ததி பெருக்கிட
வர வின் ஞானம் தூண்டிடும் செலவினை !
கலா வின் ஞானம் பார்வையைத் தொடுக்கையில்
பாலா வின் ஞானம் காதலைப் பகிர்ந்திடும்
உலா வின் ஞானம் மகிழ்ச்சியில் திளைக்கவே
கள வின் ஞானம் இன்பத்தை அளித்திடும் !
பூ வின் ஞானம் நாடிடும் கூந்தலை -- என்
நா வின் ஞானம் சுவைத்திடும் செம்மொழி
பா வின் ஞானம் சந்தங்கள் வேண்டிட --துக்ளக்
சோ வின் ஞானம் உரைப்பதும் அங்கதம் !
உழ வின் ஞானம் மாந்தரைக் காத்திட
புழு வின் ஞானம் துறப்பதும் கூட்டினை
குழு வின் ஞானம் முழுமையைத் தந்திட
மழு வின் ஞானம் சிவன் கரம் அடைந்ததே !
மது வின் ஞானம் போதையை செலுத்தவே
மாது வின் ஞானம் கொள்வதும் கவலையே
சேது வின் ஞானம் அரசியல் பற்றிட
கேது வின் ஞானம் அளிப்பதும் தோசமே !
அணு வின் ஞானம் கண்டது போர்க்களம்
மனு வின் ஞானம் அளித்தது நீதியை
மனு வின் ஞானம் ஊழலை வளர்த்திட -- கலைப்புலி
தாணு வின் ஞானம் திரைப்படம் நோக்குமே !
இயேசு வின் ஞானம் கருணையைப் பொழிந்திட
நாசா வின் ஞானம் செவ்வாயைக் கண்டதே
ராசா வின் ஞானம் நாட்டினைக் காக்கவே -- இளைய
ராசா வின் ஞானம் நல்லிசை தந்ததே !
அம்மா வின் ஞானம் அளிப்பதோ அன்பினை
அப்பா வின் ஞானம் புரிவதோ போதனை
தாத்தா வின் ஞானம் உணர்த்திடும் நெறிகளை
அல்லா வின் ஞானம் உரைப்பதோ ஈகையே !!!
************************
( ஹயாக்ஸ் நிறுவனத்தின் 11 வது ஆண்டுவிழாவை யொட்டி நடத்தப்படும் கவிதைப் போட்டிக்கு
அளிக்கப்பட தலைப்புகளில் " வின் ஞானம் " என்ற பிளவுபட்ட இரு சொற்களில் அமைந்த
தலைப்பினில் அவ்விரண்டு சொற்களைப் பயன்படுத்தி யான் உற்ற கற்பனையில் இப்புனைவை
புனைந்தேன் . ஆனால் போட்டிக்கு தேர்வாகவில்லை. இருந்தும் பார்வையிடாதார் பார்வைக்கு
மீண்டும்