வரதட்சணை மாப்பிள்ளை

வரதட்சணை
அன்பே…
கல்யாணச் சந்தையில் நம்
காதல் விலைபேசப்பட்ட போது.
என்
ஆண்மை அவமானப் பட்டது
சொந்தங்களே தீப் பந்தங்களாக
நெஞ்சைச் சுட்டபோது
உயிரே பாரமானது
உணர்வே ஈரமானது..
தலை கவிழ்ந்து வாழ்வதை விட
தலை சாய்க்கத் துணிந்து விட்டேன்
உன்னில் வாழும் என்னுயிரை
உடனே எனக்குத் தருவாயா?