வம்பிலே வானம்பாடி

சுவருக்கு
கண் இருக்கலாம்
காது இருக்கலாம்
ஆனால்
வாய் மட்டும்
யாருடையதோ...
வாய் பேசும்
வம்பு வார்த்தைகள் எல்லாம்
வதந்திகளாய் அலைய விட்டு
துன்பங்களில்
வாழ்க்கைத் தேடும்
வழக்கை ஒழித்துவிட
பூமியே பூக்கோலம் தான்
விஞ்ஞானத்தில் உயர்ந்து
அஞ்ஞானத்தில் ஆழ்ந்து
மெய் ஞானத்தை
தொலைத்து விட்டோமடி!
நேர்மையின் வாசலில்
அன்பின்கோலத்தில்
வரவேற்றிடலாம் வசந்தங்கள்!
எக்காலத்துக்கும் ஏற்றவராய்
பொற்காலம் புனைந்திடலாம்
பண்பில் உயர்ந்திடில்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Nov-15, 3:57 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 40

மேலே