சுமித்ரா விஷ்ணு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுமித்ரா விஷ்ணு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 17-Sep-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 1200 |
புள்ளி | : 520 |
உன் இமைகள்
என் மேலிருந்து
நீங்கிய நிமிடங்கள்
வில்லாய் வளைந்த
வானவில் புருவங்கள்
அம்புகள் தொடுக்காதோ..?
கண் வண்டுகளில்
மை தீட்டி
மனதைத் தீண்டாயோ..?
அழகிய இதழ்களில்
இரு மொட்டுகள்
இன்னிசை மீட்டாதோ..?
வளைக்கரங்களில் எனை
வளைக்க வேண்டித் தவம்!
கொலுசுக் காலில்
தாளமிட்டு என்னைக்
கொய்தே போக
முயற்சிக்க மாட்டாயா...?
தவமாய் தவமிருந்து...
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முகம்
வெளிப்படுத்தும் அவள்
புரியாத புதிர்
நான் நோக்காத
நோக்கங்கள் அவள்
கொண்ட போது
அதிசயம் கொள்கிறேன்
என் நோக்கத்திலும் இல்லாத
இலட்சியங்கள் அவளை
வியக்கிறேன்
ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு நற்குணங்களை
வாசித்திடும் மடல்
அவள் என் விழித்திரைக்குள் மட்டும்
உலவும் மாயபிம்பம்
என் செல்லக் காதலியின்
பல வித முகபாவங்கள்
பல வித தேவதைகளாய்
என் அகத்திரைக்கு மட்டும்
கிழிந்து போன முகங்களும்
வலிகள் மறந்துவிடும்
முகத்திரைகள் கிழிந்த
முகங்களின் வலிகள் மாறாது
அடாது செய்தவர்கள்
படாது படுவர் பழமொழி
போலியான நடிப்பில்
புதைந்து போன உண்மைகள்
அடங்காத ஆட்டத்தில்
அதுவாய் புலப்படும்போது
அகத்தின் அழகெல்லாம்
முகம் உரைக்கையில்
மூர்க்கர்களும்,முதலையும்
கொண்டதை விடாமல்
தொடரும் ஆட்டத்தில்
படாத பாடு பட்டே தீருவர்
முங்கி முங்கி கடலிலே குளித்தாலும்
காக்கை அன்னம் ஆகப்போவதில்லை
படித்து படித்து சொன்னாலும்
பொல்லாதவர் நேர்வழி கொள்ளார்
உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது
உள்ளவர்கள் எல்லாம் உயர்ந்தவர் ஆகிடார்
உள்ளம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள்
குப்பையில் கிடந்தாலும்
குன்றிமணி நிறம் மாறிடாது
ஏழைகள் துன்பத்தில் உழண்டாலும்
பாவங்கள் சம்பாதிப்பதில்லை
மதிப்பும் குறையப்போவதில்லை
சேற்றிலும் செந்தாமரை மலர்ந்திடும்
நல்ல மனம் போகிற வழியெல்லாம்
மணம் பரப்பும். நல்லவை மலரும்
குப்பை கோபுரம் தொட்டாலும்
எப்போது வேண்டுமானாலும் விழுந்திடும்
நிரந்தரமுமில்லை.நிஜமுமில்லை
தகுதியற்ற எதுவும் உண்மையில்லை
மதிப்பு
அமைதியான கரையில்
ஆரவார அலையின்
ஆர்ப்பரிப்பில்
இரவு ஒளியில்
இதமான காற்றில்
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
இடம் மாற்றிய
ஊமைக் காதல் இன்று
எல்லாம் என்னுடன்
ஏதோ ஓர் மூலையில்
ஐக்கியம் கொண்டிடும்
ஒவ்வொரு முறையும்
ஓரங்க நாடகமாய்
ஒளிர்ந்திடும் கடற்கரை
காற்றில் நூல் கொண்டு
பின்னப்பட்ட பாசம்
உயிரோட்டமாய் உறைந்திருக்கும்
உன்னுள் ஒரு மூலையிலும்
என்னுள் ஒரு மூலையிலும்
இயற்கையின் பங்களிப்பில்
இதமாய் புறப்படும் புத்துயிர் பெற்று..
கூடப் பிறந்தவர் அறியாவண்ணம்
கூட்டுக்குள் ஒளித்து தின்னும் மனிதம்!
கூட்டைத் தாண்டியும்
கூடியே திரிந்து
கூட்டமாய் இணைந்து
இறை உண்ணும் பறவை!
கூடப் பிறந்தவர் வாழ்க்கையை அழிக்க
கூடி சதி செய்யும் மனித மனம்
கூடு விட்டு கூட்டில்
கூட்டு தேடும் பறவை!
கூடப்பிறந்தவர் சிறு வெற்றிக் காணக்
கூட்டாய் அவதூறு பரப்பும் மனிதம்!
கூட்டமாய் பறந்து
கூடி வாழ்தலின் சிறப்பை உணர்த்தும் பறவை!
கூடப்பிறந்தவர்கள் ஒருவரையொருவர்
காணாது உறவழியும் மனிதம்!
கூடு தேடித் திரிந்தாலும்
கூட்டத்தைத் தேடி வரும் பறவையினம்!