தவமாய் தவமிருந்து
உன் இமைகள்
என் மேலிருந்து
நீங்கிய நிமிடங்கள்
வில்லாய் வளைந்த
வானவில் புருவங்கள்
அம்புகள் தொடுக்காதோ..?
கண் வண்டுகளில்
மை தீட்டி
மனதைத் தீண்டாயோ..?
அழகிய இதழ்களில்
இரு மொட்டுகள்
இன்னிசை மீட்டாதோ..?
வளைக்கரங்களில் எனை
வளைக்க வேண்டித் தவம்!
கொலுசுக் காலில்
தாளமிட்டு என்னைக்
கொய்தே போக
முயற்சிக்க மாட்டாயா...?
தவமாய் தவமிருந்து...