கூடியே திரிந்து

கூடப் பிறந்தவர் அறியாவண்ணம்
கூட்டுக்குள் ஒளித்து தின்னும் மனிதம்!
கூட்டைத் தாண்டியும்
கூடியே திரிந்து
கூட்டமாய் இணைந்து
இறை உண்ணும் பறவை!
கூடப் பிறந்தவர் வாழ்க்கையை அழிக்க
கூடி சதி செய்யும் மனித மனம்
கூடு விட்டு கூட்டில்
கூட்டு தேடும் பறவை!
கூடப்பிறந்தவர் சிறு வெற்றிக் காணக்
கூட்டாய் அவதூறு பரப்பும் மனிதம்!
கூட்டமாய் பறந்து
கூடி வாழ்தலின் சிறப்பை உணர்த்தும் பறவை!
கூடப்பிறந்தவர்கள் ஒருவரையொருவர்
காணாது உறவழியும் மனிதம்!
கூடு தேடித் திரிந்தாலும்
கூட்டத்தைத் தேடி வரும் பறவையினம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (12-May-15, 3:18 pm)
Tanglish : koodaiye thirinthu
பார்வை : 103

மேலே