என் வீட்டு ரோஜா பூவே

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் இறை வாசம் !
அதை காண்ணும் போது என் மனம் முழுக்க பூவாசம் !
என் வீட்டு வண்ணவண்ண ரோஜாவே ! - என்
மனதிற்குள் புகுந்து வர்ணஜாலங்கள் செய்கிறாயே !
உன் ரோஜா குடும்பத்து நபர் - சிகப்பு
ரோஜாவை பார்த்தேன் காதல் வந்தது !
மஞ்சள் ரோஜாவை பார்த்தேன் மகிழ்ச்சி வந்தது !
உதாவை பார்த்தேன் ஒருவரை வரவேர்க்க வேண்டிய நினைவு வந்தது !
வெள்ளை ரோஜாவை பார்த்தேன் துய்மை அடைந்தது என் மனம் ..
இது போல் ஒவ்வொன்றையும் பார்த்தேன் என் மனம் முழுக்க ரோஜா வாசம் !
அதனால் என் தகப்பன் செய்து தந்தார் ஒரு அழகிய ரோஜா பூ தலை கவசம் !
இப்பொழுது நானும் போட்டுவிட்டேன் உன் வேசம் !
இதே நினைவில் சுவாசித்துவிட்டேன் உன் சுவாசம் - ஓரிரு மாசம் !
இறுதியில் உன் அழகான வர்ணஜால ஏக்கதிளையே சேர்ந்து விட்டேன் உன் வசம் !