உன்னுள்ளும்,என்னுள்ளும்

அமைதியான கரையில்
ஆரவார அலையின்
ஆர்ப்பரிப்பில்
இரவு ஒளியில்
இதமான காற்றில்
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
இடம் மாற்றிய
ஊமைக் காதல் இன்று
எல்லாம் என்னுடன்
ஏதோ ஓர் மூலையில்
ஐக்கியம் கொண்டிடும்
ஒவ்வொரு முறையும்
ஓரங்க நாடகமாய்
ஒளிர்ந்திடும் கடற்கரை
காற்றில் நூல் கொண்டு
பின்னப்பட்ட பாசம்
உயிரோட்டமாய் உறைந்திருக்கும்
உன்னுள் ஒரு மூலையிலும்
என்னுள் ஒரு மூலையிலும்
இயற்கையின் பங்களிப்பில்
இதமாய் புறப்படும் புத்துயிர் பெற்று..

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Apr-16, 11:55 pm)
பார்வை : 65

மேலே