செந்தாமரைகள் பழமொழி கவிதைகள் - 7 - பாகம் -2
முங்கி முங்கி கடலிலே குளித்தாலும்
காக்கை அன்னம் ஆகப்போவதில்லை
படித்து படித்து சொன்னாலும்
பொல்லாதவர் நேர்வழி கொள்ளார்
உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது
உள்ளவர்கள் எல்லாம் உயர்ந்தவர் ஆகிடார்
உள்ளம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள்
குப்பையில் கிடந்தாலும்
குன்றிமணி நிறம் மாறிடாது
ஏழைகள் துன்பத்தில் உழண்டாலும்
பாவங்கள் சம்பாதிப்பதில்லை
மதிப்பும் குறையப்போவதில்லை
சேற்றிலும் செந்தாமரை மலர்ந்திடும்
நல்ல மனம் போகிற வழியெல்லாம்
மணம் பரப்பும். நல்லவை மலரும்
குப்பை கோபுரம் தொட்டாலும்
எப்போது வேண்டுமானாலும் விழுந்திடும்
நிரந்தரமுமில்லை.நிஜமுமில்லை
தகுதியற்ற எதுவும் உண்மையில்லை
மதிப்புடைய எதுவும்
மதியில் நம் மதிப்பில் உயர்ந்திடும்.