பெங்குவின்கள்

பெங்குவின்கள் ..
கூட்டமாக இருப்பதை
விரும்புபவை..
உண்ணும்போதும்
இரை தேட கடலில் இறங்கும்போதும்
சேர்ந்தே செல்வதில் நாட்டம் உடையவை

ஆயிரக்கணக்கில்
அவை இருக்கும் போதும் கூட
அவற்றின் நட்பு வட்டத்தையும்
இணைகளையும்
தனித்த குரலெழுப்பி அடையாளம்
கண்டு கொள்ள வைப்பவை ..

கருமை நிறத்தில் உள்ள குஞ்சுகளை
வளர்ந்த பெங்குவின்கள்
போட்டியாக நினைப்பதில்லை ..

நீரில் இருக்கும்போது
பெங்குவின்களை ..
சுறாக்கள், திமிங்கலங்கள்,
சீல்கள், ஆகியவையும்..

நிலத்தில் நரிகளும் ,
ஓநாய்களும், நாய்களும்,
பெரும் பூனைகளும்
அழித்து விடுகின்றன..

பெங்குவின்களின்
வண்ணச் சிறகுகளை
அலங்காரத்திற்காகவும்
பஞ்சு மெத்தைக்கு திணிப்பாகவும்
அவற்றின் முட்டைகளை கூட
கவர்ந்து விடும் மனிதர்களை
அவற்றிற்கு அடையாளம்
தெரிவதில்லை ..
எளிதில் நம்பி அருகில் வரும்
குணமுடைய அவை அபாயம்
கண்டாலும் தப்பித்து பறக்கும்
சக்தியும் இல்லாதவை

அதனாலேயே ..
அண்டார்டிகா போன்ற
மனித சஞ்சாரம் அதிகமற்ற இடத்தில்
குடியேற்றப்பட்டன இயற்கையால்

..அப்பாவிப் பெங்குவின்கள் ..

மனிதர்களிலும் பெங்குவின்கள்
இருக்கிறார்கள் .. அவர்களுக்கு
அந்த வசதி பொதுவாக
கிடைப்பதில்லை!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (18-Apr-16, 11:47 am)
பார்வை : 68

மேலே