மீண்டும் மீண்டும் அனுவின் கேள்வி
அனுவின் கேள்வி மீண்டும் மீண்டும்
அப்பா டீ வேணுமா இன்னும் கொஞ்சம் ?
ஆமாம் கொஞ்சினேன் வேண்டும் வேண்டும்
அவள் குப்பியில் டீ கொடுக்க நான் குடிக்க
அதை கெடுக்க அகம் நுழைந்தாள் பத்தினி
என்ன குடிக்கிறீர்கள்? கூத்தடிக்கிறீர்கள்?
அதட்டினாள் அருமை மனைவி சிரித்தேன்
அடியே அனுவின் டீ அபாரம் நீயும் குடி
முறைத்தாள் மனைவி மறுத்தாள் டீயை
அது சரி, அனுவோ குழந்தை! அவளுக்கு
எட்டும் உயரத்தில் டாய்லெட் மட்டும் தான்
அது கூடவா தெரியாது அசட்டு அத்தான் ?
கதவின் பின்னால் அரவம் அனு தலை எட்டி
குசு குசு மழலையில் “ வேணுமா அப்பா டீ ?“
குண்டுஅனு இன்றேனோ அணு குண்டானாள் !
கரிய கண்ணால் எனை கவிழ்த்து விட்டாள் !