முரளிதரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முரளிதரன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 20-Dec-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 521 |
புள்ளி | : 126 |
முரளிதரன் எனும் எனது இயற்பெயரில் கடந்த ஒரு வருடமாக சிறு கதைகள் எழுதி வருகிறேன். சில கதைகள் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம்.
முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம் . அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் .
அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை , என்ற ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள்., தேவர்களான இந்திரன், வருணன், வாயு, அக்னி போன்றவர்கள் , சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, பரமாத்மா பார்த்தார். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயித்த உடனே, அசுர குணம் வந்துவிடும் போல இருக்கே, என்று நினைத்து, , அப்படி கெட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி, அவர்கள் வரும் வழியில் ஒரு அடிமுடி காண முடியாத மாத
கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது .
அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும் யமதர்மனுக்கும் இடையில் நடக்கும் சர்ச்சை .
வேத காலத்தில் , நசிகேதனின் தந்தை வாஜஸ்வர முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஸ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். பெரிய முனிவர்கள், ரிஷிகள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.
விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது நிறைவேற வேண்டுமென்றால், யாகம் செய்பவர் , தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.
அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான் அனைத்து
யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறப்படுகின்றான்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பாண்டவர்களில் மூத்தவர் , தருமபுத்ரர் எனும் யுதிஷ்டிரன். ஸ்திர புத்தி உடையவர் .
ஸ்திர புத்தி பற்றி கீதை சொல்கிறது ( 2.56)
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥
“துன்பங்களிலே மனம் கெடாதவனாய்
இன்பங்களிலே ஆவல் அற்றவனாய்
அச்சமும் சினமும் தவிர்த்தனவாய்
அம்முனி மதியிலே உறுதி வாய்ந்தவென்ப”
(நன்றி கீதை பேருரை – நா கிரிதாரி பிரசாத்)
கீ
தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. . மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான்.
தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள , ராஜதுரை மாடியிலிருந்து குதித்து விட்டான். ஆனால் இறக்க வில்லை. ராஜதுரைக்கு மூளையில் நல்ல அடி. அவன் தன் சுய நினைவிழந்தான். மீண்டும் கோமாவிலிருந்து மீண்டு வருகையில், அவன் செய்த கொலையைப் பற்றி, ராஜதுரைக்கு எந்த நினைவுமில்லை. அவன் மனைவி பற்றி ஒரு நினைவுமில்லை.
போலீஸ் அவனை கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை. சோடியம் அமிடால் போன்ற மருந்துகளும் அவன் நினைவுகளை மீட்கவில்லை. ஆனால், ராஜதுரை
காப்பாற்று கடவுளே எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !
பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு பார் பர பரவென்றே எழு
பக்கத்து வீட்டு பையன் கூட போய் விட்டான்
பிடிவாதம் வேண்டாம் போகத்தான் வேண்டும்
பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா ! பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !
மறையது உண்டு அவனியில் இன்று
அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
ஆண்டவன் அவதாரம் என்று!
மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
மகா பாரதத்தில் அன்று !
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
மாயன் தங்கையால் : நன்று !
அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
அன்புடன் சொல்வீர் !
****
கண்ணன் சொன்னது கீதையில் :
_____________________________
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||
(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறு
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை காதலாய் பற்றினான்
காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்
கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
கொடுப்பேன் பரிசு மாப்பிள்ளை நானே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை தான் போனேன் நொடியில் நான் !
அமரராகிவிட்டார் அப்பா ஆனால் இன்றும்
அகலவில்லை எங்களை விட்டு !
அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் அழியா பிம்பம் மட்டும் என் அம்மாவிடம்!
அப்பாவி என்னப்பா! அவரை பாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை காதலாய் பற்றினான்
காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்
கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
கொடுப்பேன் பரிசு மாப்பிள்ளை நானே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை தான் போனேன் நொடியில் நான் !
அமரராகிவிட்டார் அப்பா ஆனால் இன்றும்
அகலவில்லை எங்களை விட்டு !
அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் அழியா பிம்பம் மட்டும் என் அம்மாவிடம்!
அப்பாவி என்னப்பா! அவரை பாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!
சகாதேவன் :
யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான்.
இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் விட்டுட்டு அங்கே ஓடிப்போவான். இருக்கிற காசிலே , அங்கே உதவி செய்கிறவர்களுக்கு, டீ வாங்கிக் கொடுப்பான், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பான். சுமங்கலமோ அமங்கலமோ இல்லை சோகமான பேரிடரோ , சகாவின் உதவிக் கரம் எப்போதுமே நீளும்.
சொல்லப்போனால், அவன்