நரசிம்மன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நரசிம்மன்
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  17-May-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2016
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  10

என்னைப் பற்றி...

உங்களைப் போலவே தான் ..தமிழை நேசிப்பவன்

என் படைப்புகள்
நரசிம்மன் செய்திகள்
நரசிம்மன் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2016 6:09 pm

எழுத ஆரம்பிக்கிறேன்
சிறிது இடைவெளியில்
ஏன் எதற்கு என்ற
எண்ணச் சுழலில்
எழுதியதை எல்லாம்
அழித்து விடுகிறேன்
இப்பொழுது நீங்கள்
நான் எழுதாததைத் தான்
படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
----- முரளி

மேலும்

புரியலீங்க அய்யா..இருந்தாலும் வித்தியாசமா இருக்குது..புரிஞ்சிக்க முயற்சி செய்றேன்! .. 14-May-2016 2:07 pm
இன்னும் எழுதுங்கள்..இது அத்தனை நல்லா இல்லை நண்பா. அதோடு இல்லை..பொதுவாக உமது கம்மெண்டுகள்(அ) கருத்துகள் முறைப்படுத்திய பின் அர்த்தமுள்ளதாக பதிந்தால் நல்லா இருக்கும்கறது எண்ட அபிப்ராயம்..நண்பர்னு ஏத்து கிட்டதால சொல்றேன்.. 14-May-2016 2:03 pm
எதில் தொடக்கமாகிறதோ அதில் தான் முடிவடையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 7:03 am
நரசிம்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2016 11:45 am

பொதி அவிழ்
தாமரைப் பூவை ஒத்தவள்
இவன் அழகன்
இல்லையென்பதால்
ஒப்பாது போகலாம்

கதிர் மதி ஒளிரும்
மதிக்கும் ஓர் மறு உண்டே!

என் செய்தாளோ ..
கவிஎனைத் தூக்கி எறிந்தவள்
எந்த கவிக்கு (மந்தி )
துணை ஆனாளோ ?..

யாமொன்றறியோம்
பராபரமே !

மேலும்

கவிதைக்குள் ஆயிரம் எழுத்துப் பிழைகள் வருவது காதலினால் மட்டுமே! 16-Apr-2016 5:58 pm
நரசிம்மன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2016 9:36 pm

இயல்பாய் இருப்பதும்
அலட்டிக்கொள்ளாமல் வாழ்வதும்
ஒரு ரகம்.!

எதற்கெடுத்தாலும் கடுப்பாவதும்
அவசரப்படுவதும் கோபப்படுவதும்
இன்னொரு ரகம்..!

காரணமே இல்லாமல்
சோகமாக இருப்பது
ஒரு சாபம்..

காரணமே இல்லாமல்
மகிழ்ச்சியாய் இருப்பது
ஒரு வரம்...

மேலும்

இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு உள்ளே கடுப்பாகும், எரிச்சலாகும் மனிதர்களும் இன்னொரு ரகமாக இருக்கிறார்கள்..காரணமே இல்லாமல் இன்னொருவன் சோகத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவது சாபமும் இல்லை..வரமும் இல்லை..மிருக குணம்.. ஒ.. உங்கள் சொல்லாடல் வாசகனையும் சிந்திக்க வைத்து விடுகிறது..இதுவே எழுத்தின் அபரிமிதமான வெற்றி! 15-Apr-2016 6:22 pm
உண்மைதான்..பணத்தை மட்டும் எதிர்பார்ப்பது இரு ரகமும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Apr-2016 11:31 pm
நரசிம்மன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2016 4:55 pm

சிலு சிலுவென அடிக்கும் தென்றக் காத்தினிலே
சிங்கார மாமன் தென்னந் தோப்பினிலே
பள பளன்னு கண்டாங்கி சேலை கட்டி
தென்னையிலே சாஞ்சுகிட்டு நீ பாட்டு படிக்கையிலே
தென்னைக்கு கிடைச்ச சுகம்
என்னைக்கு எனக்கு கிடைக்குமுன்னு
பட படன்னு யேன் நெஞ்சு அடிக்குதடி !

அடி யேன் அத்தை மவளே
தை போயி சித்திரையும் வந்தாச்சு
ஓன் அப்பன் இப்படி யேன் தேமேன்னு கிடக்காண்டி ?
பந்தக்காரன் மேளகாரன் ஐயரு
செல்லுல போட்டா டான்னு வந்து நிப்பாங்க
பின்ன என்னத்துக்கு இழுதடிக்கான் உங்கப்பன் ?
ஆத்துல தண்ணி இல்ல அறுவடையில மேனியில்லன்னு
சாக்குச் சொல்லி சாக்குச் சொல்லி மூனு வருசம் தள்ளிப் போட்டாச்சு
இன்னும் ஒ

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 16-Apr-2016 3:34 pm
Thanks 16-Apr-2016 1:33 pm
கிராமிய நிலத்தில் இயற்கை மட்டும் அழகில்லை காதலும் அழகு தான் உங்கள் வரிகளை போல் 16-Apr-2016 11:46 am
நீ என் பெண்டாட்டிக்கு சக்களத்தியாத்தான் வருவேன்னு" ----இது தான் சரி எழுதும்ம்போதே நினைத்தேன் . நீ சக்களத்தியாத்தான் வருவே.......என்பதே பொருத்தமாயிருக்கும் பெண்டாட்டி is implied ---திருத்துகிறேன் படம் சூப்பர் ..மீண்டும்..கவிதைக்கு துணையாக இருக்கு.. ---உண்மை .சரியாகச் சொன்னீர்கள் கவிதையை ரசித்துப் படித்து கருத்துச் சொல்லும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது இளைஞர்களது click world மிக்க நன்றி கவிப்பிரிய நரசிம்மன் அன்புடன், கவின் சாரலன் 15-Apr-2016 6:23 pm
நரசிம்மன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2016 5:43 pm

சேலையும் சோலையும்
அவள் காவலர்கள்
மாலையும் காலையும்
அவள் தூதுவர்கள்
இரண்டுக்கும் நடுவில் ஓர்
கவிஞன் காதலன்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Apr-2016 11:59 am
அழகு! 16-Apr-2016 8:11 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Apr-2016 10:59 am
திரைப்படங்களில் வருகிற அளவுக்கு படம் .. திரைப்பாடல்கள் எழுதும் கவிஞர்களை மிஞ்சும் கவிதை சிந்தனையில் சீரியசாக விரைகிறது காதல் ரயில் .. இன்னும் எழுதுங்கள்..தோழர்! 12-Apr-2016 10:42 am
நரசிம்மன் - சுஜய் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2016 8:42 am

கிளை நுனியில்
ஒரு பறவை அமர்ந்திருந்தது
அதன் தேடலை
வானத்தில் தூவிக்கொண்டு
கூடற்ற அப்பறவை
விழுங்க வருவதாய்
இலைகளுள் பதுங்கியது
கவியும் அந்தி பார்த்து
பின் புலர்ந்த நிலவை
வெறித்த பறவை
தனிமையின்
அழகியலில் அலகு
நுழைத்து
கொத்தியெடுத்த
வசந்தத்தின் சேகாரங்களை
இந்த பூமியெங்கும்
இறைத்துக்கொண்டே
சிறகடிக்கலானது
அதன் மென் கால்களின்
உந்தலில்
மெள்ளக் காற்றாடும்
சிறு கிளையில்
மறுகணமே
பறவையாகியிருந்தது
என் பெரு வாழ்வு....!

மேலும்

அதன் மென் கால்களின் உந்தலில் மெள்ளக் காற்றாடும் சிறு கிளையில் மறுகணமே பறவையாகியிருந்தது என் பெரு வாழ்வு. அற்புதமான வரிகள் 29-Apr-2016 11:20 am
//மெள்ளக் காற்றாடும் சிறு கிளையில் மறுகணமே பறவையாகியிருந்தது என் பெரு வாழ்வு....!// சிறகடிக்கும் ஏக்கம் தெரிகிறது ..அருமை 12-Apr-2016 8:36 pm
சிறப்பான கவி ஓட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Apr-2016 10:37 am
நரசிம்மன் - எண்ணம் (public)
12-Apr-2016 9:30 am

 என் கவிதைகள் ...விற்பனைக்கல்லஎன் கவிதைகள் 
விற்பனைக்கு அல்ல 
என்பதை சொல்லாமல் 
ஒரு காகம் 
உயரத்தில் 
பறக்கிறது .. 
அதன் எச்சங்களில் 
கோடி விதைகள் 
மரங்கள் ஆகி  விடுகின்றன ! 


என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லாமல் 
ஒரு அருவி 
நதியாகி கடலில் 
சேர்கிறது .. 
கோடானு கோடி 
பயிர்கள் இதற்குள் 
விளைந்து விடுகின்றன ! 

என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லாமல் 
காற்றும்..மழையும் 
மண்ணும் , வானும் 
அற்புதங்கள் நிதம் 
செய்கின்றன.. 
அகிலத்தை அதற்குள் 
வாழவைத்து! 


என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லி 
பஞ்சைகளிடம் 
கவிதை விற்ற 
மனிதர்கள்.. 
.. 
.. 
என்ன மாற்றம் 
ஏற்படுத்தினார்கள்?  

மேலும்

நரசிம்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2016 9:21 am

என் கவிதைகள்
விற்பனைக்கு அல்ல
என்பதை சொல்லாமல்
ஒரு காகம்
உயரத்தில்
பறக்கிறது ..
அதன் எச்சங்களில்
கோடி விதைகள்
மரங்களாகி விடுகின்றன !


என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லாமல்
ஒரு அருவி
நதியாகி கடலில்
சேர்கிறது ..
கோடானு கோடி
பயிர்கள் இதற்குள்
விளைந்து விடுகின்றன !

என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லாமல்
காற்றும்..மழையும்
மண்ணும் , வானும்
அற்புதங்கள் நிதம்
செய்கின்றன..
அகிலத்தை அதற்குள்
வாழவைத்து!


என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லிவிட்டு
பஞ்சைகளிடம்
கவிதை விற்ற
மனிதர்கள்..
..
..
என்ன மாற்றம்
ஏற்படுத்தினார்கள்?

மேலும்

வாழ்க்கையை நகர்த்த வருமானம் என்பது அவசியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Apr-2016 10:24 am
நரசிம்மன் - கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2016 6:20 pm

சன்னல் குருவிக்கு
மட்டுமே தெரியும்
எனது அதிகாலை
எத்தனை அழகு

தன்னந் தனிமையில்
தனிமையில் லயி்க்கும்
ஏரிக்கு மட்டுமே
தெரியுமென் சலனம்

எனக்குப் புரியும்
மலரின் நாதம்
மலரும் அறியுமென்
மனசின் வேதம்

அலைகள் இசைக்கும்
பிரபஞ்ச கீதம்
காட்டு நதியின்
பாத சுரங்கள்
பாறைகள் பேசும்
தியான மொழிகள்
வானம் சிமிட்டும்
நட்சத்திர விழிகள்

தேவதைகள் பாடும்
நிசப்த இரவுகள்
நிசப்த இரவின்
நீலக் கனவுகள்
காற்றில் விரியும்
மகரந்த சிறகுகள்
வசந்தம் பாடி
உதிரும் சருகுகள்


இன்னும் இன்னும்
எத்தனை எத்தனை
கண்ணில் விரிய
கண்ணில் விரிய
எம்மை தொடரும்
இறைவனின் நிழல்கள்
சின்ன மனசுக்குள்
சிக்

மேலும்

இயற்கையின் இனிய குழலோசை. இதில் மயங்காதவர்கள் யாருமில்லை. அந்த குருவியைப் போலவே இந்த கவிதை சன்னலில் உங்கள் வர்ணனை அழகை இரசிக்கிறேன். 12-Apr-2016 10:50 pm
சளைக்காமல் வாழ்த்தும் தமிழ் மனம்,..... மிக நன்றி 11-Apr-2016 11:28 pm
தாராளமாக பாராட்டும் உங்கள் மேன்மைதான் உண்மை அழகு ஐயா 11-Apr-2016 10:01 pm
தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி 11-Apr-2016 10:00 pm
நரசிம்மன் - சுஜய் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2016 8:37 am

இண்டர்வியு கேள்விகள்
இரவு முழுதும் பெய்த பனித் துளிகளென
உறைந்து கிடக்கிறது என்னுள்
அந்த அலுவலகத்தின் முகப்பிலும் நின்று
நானொரு செல்பி எடுத்துக் கொண்டு
நுழைகிறேன்
அங்கே மார்பில் கல்லில்
பிரதிபலிக்கும் பிம்பங்கள்
வர்ணப் பூச்சிட்ட கோட்டோவியங்களாய்
விரவி மறைகின்றன
கண்ணாடிப் பேழை மீன்களின்
வழக்கமான கேலி நீர்குமிழ் படர்த்தலை
கண்டும் காணாமல் கடக்கிறேன்
வந்திருந்த யுவன் யுவதிகள் பரஸ்பரம்
புன்னகையைச் சிதறவிடுகிறார்கள்
அலைபேசியின் அதகளமங்கில்லை
நதி பிரிந்த மணற் குவியலும்
சாக்கடை நீர் பருகும் அணிலும்
இலையுதிர் மரத்தின் வெறுமையும்
இரவு தனித்த நட்சத்திரமும்
நெடுந

மேலும்

நன்றிகள் அம்மா ! 09-Mar-2016 2:58 pm
மிக்க நன்றி நண்பரே !! 09-Mar-2016 2:58 pm
இன்டர்வியுவில் தேறிவிட்ட பின் கவலை எதற்கு / மீன்களும் புரிந்து கொள்ளும் இந்த மகானின் மனதை வாழ்த்துக்கள் 09-Mar-2016 10:36 am
பளிச்னு சொல்லிடுங்க.. ..அசத்துறீங்களே ! 09-Mar-2016 10:23 am
நரசிம்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2016 10:15 am

யாது மாகி நின்றாய்-- காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம்-- காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் -- காளி
பொறி களைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.

இன்ப மாகி விட்டாய் -- காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் -- காளி
பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் -- காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் -- காளி
தொல்லை போக்கி விட்டாய்.


- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சுஜய் ரகு

சுஜய் ரகு

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சுஜய் ரகு

சுஜய் ரகு

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சுஜய் ரகு

சுஜய் ரகு

திருப்பூர்
மேலே