நரசிம்மன்- கருத்துகள்

புரியலீங்க அய்யா..இருந்தாலும் வித்தியாசமா இருக்குது..புரிஞ்சிக்க முயற்சி செய்றேன்! ..

இன்னும் எழுதுங்கள்..இது அத்தனை நல்லா இல்லை நண்பா. அதோடு இல்லை..பொதுவாக உமது கம்மெண்டுகள்(அ) கருத்துகள் முறைப்படுத்திய பின் அர்த்தமுள்ளதாக பதிந்தால் நல்லா இருக்கும்கறது எண்ட அபிப்ராயம்..நண்பர்னு ஏத்து கிட்டதால சொல்றேன்..

இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு உள்ளே கடுப்பாகும், எரிச்சலாகும் மனிதர்களும் இன்னொரு ரகமாக இருக்கிறார்கள்..காரணமே இல்லாமல் இன்னொருவன் சோகத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவது சாபமும் இல்லை..வரமும் இல்லை..மிருக குணம்..

ஒ.. உங்கள் சொல்லாடல் வாசகனையும் சிந்திக்க வைத்து விடுகிறது..இதுவே எழுத்தின் அபரிமிதமான வெற்றி!

சாக்குச் சொல்லி சாக்குச் சொல்லி மூனு வருசம் தள்ளிப் போட்டாச்சு
இன்னும் ஒங்கப்பன் சாக்குச் சொன்னா
நீ எனக்கு சக்களத்தியாத்தான் வருவே சொல்லிபுட்டேன் ஆமா ...
..
"நீ என் பெண்டாட்டிக்கு சக்களத்தியாத்தான் வருவேன்னு" இருந்திருக்கணும்னு நினைக்கிறேன் ..

படம் சூப்பர் ..மீண்டும்..கவிதைக்கு துணையாக இருக்கு..

நன்று. மனதில் பட்டது சொன்னது ..மனம் மகிழ்ந்தது பெருந்தன்மை கண்டு !உங்களால் முடியும்!

திரைப்படங்களில் வருகிற அளவுக்கு படம் ..
திரைப்பாடல்கள் எழுதும் கவிஞர்களை மிஞ்சும் கவிதை
சிந்தனையில் சீரியசாக விரைகிறது காதல் ரயில் ..
இன்னும் எழுதுங்கள்..தோழர்!

// அஹ்..ஹா..உங்கள் தகப்பனாரின் வாழ்த்துகளை தாங்கி வந்த அஞ்சல்காரனோ நான் ?? //

// பொறுமையாக படித்தால் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் நீளம் குறைத்திருந்தால் கனவுகளின் வண்ணம் தெரிஞ்சிருக்கும் ..காப்பி பற்றி எழுதியது கனவு இல்லையே ?? //

இந்த படத்திற்கு பின்வரும் நெடுநல்வாடை பாடல் சரியாக இருந்க்குமோ என்னவோ..

"தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல்அடி வருட"

நல்லாருக்கு..ஆனா இன்னும் பொறுமையா நேரம் எடுத்து செதுக்கியிருந்தா சிற்பமாக ஒரு கவிதை கெடைச்சிருக்குமே.. சூல் கொண்ட விதை -கவிதை ஆக கொஞ்சம் நேரம் கொடுக்கலாமே!

பத்து வரி சிறுகதைய 20 வரிகளாக மடக்கி கவிதைன்னுட்டு பிரசுரம் செஞ்சிக்கிற கவிஞர்கள் மாதிரி செய்யாம , நல்ல கவிதைகள எழுதிட்டு , வெளிய தெரியாம இருக்கறவங்கள இத மாரி தொடர்கள் மூலம்...... என்று படிக்க வேண்டுகிறேன்

என்ன பெரிய பாவம் செய்து விட்டீர்கள் அப்படி..? இதில் வளர்ச்சி எங்கே கெடுது..நல்லாதானே நெறைய பேர்கள் உருவாகறாங்க..அல்லது வெளியில் தெரியிறாங்க.. அங்க இங்க ஆழ புடிச்சி ஆனந்த விகடன் போல பத்திரிகையில பத்து வரி சிறுகதைய 20 வரி மடக்கி பிரசுரம் செஞ்சிக்கிற கவிஞர்கள் மாதிரி வெளிய தெரியாம இருக்கறவங்கள இத மாரி தொடர்கள் மூலம் நீங்க வெளியே கொண்டு வரது தப்பா..?ஒண்ணுமே புரியலப்பா ..ராமா..ராமா..!

இனிய படைப்புகள் ..தொகுத்திருப்பது சிறப்பு..பல படைப்புகள் உயர்ந்த தரத்தில் உள்ளன !

ரொம்ப கேசுவலா எடுத்துகிட்டு கருத்து சொன்னமைக்கு நன்றி..ஏற்கனவே உமது சிறந்த மற்ற படைப்புகளை பார்த்து தான் இன்னும் சிறந்தவற்றை வெளிக்கொணர வேண்டினேன்..தவறாக எடுத்துக் கொள்ளாததுக்கு ரொம்பவும் நன்றி .

எனக்குப் புரியும்
மலரின் நாதம்
மலரும் அறியுமென்
மனசின் வேதம்
..... எப்பேர்பட்ட உணர்வுகளை ஒரு கவிஞால் இவ்வளவு எளிதாக கொண்டு வந்து விட முடிகிறது..அசந்து விட்டேன்..அருமை !

மேலேஉள்ள இரண்டு கவிதைகளும்(?) ஏதோ சொல்ல வந்து என்னவோ ஆகி விடுகிறமாதிரி இருக்கிறது நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ..முயற்சித்தால் இன்னும் சிறப்பான கவித்துவம் நிறைந்த படைப்புகளை தர முயற்சிக்கலாம்!

அநேகமாக எல்லாமே நல்லாதான் தெரிகிறது ..ஒரு சிலவற்றை தவிர..இருந்தாலும் இப்படியும் ஒரு இலக்கிய சேவை அளித்து வருவது பாராட்டுக்குரியது..இந்த தளத்தில் பொதுவாக நான் காண முடியாதது ..வந்து கொஞ்ச நாளில் நான் பார்த்தவரை ..மெதுவாக எல்லாவற்றையும் படித்து வருகிறேன்..இவற்றையெல்லாம் மேலேயே தனி தொகுப்புகளை தெரியுமாறு செய்தால் என்ன..?

மன்னிக்கவும் ..வெறு சில ஹிக்கூ இங்கே படித்தால் உமது ஹைக்க்கூகள் அததனையும் நன்றே ..எனது முன் தந்த கருத்தது தவறு


நரசிம்மன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே