கொள்ளை கொண்டவன்
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை காதலாய் பற்றினான்
காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்
கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
கொடுப்பேன் பரிசு மாப்பிள்ளை நானே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை தான் போனேன் நொடியில் நான் !