நீ எனக்கு மட்டுமே
உந்தன் கைகளுக்குள்
எந்தன் கை
வாழுமடா
உந்தன் கண்களுக்குள்
எந்தன் உருவம்
நிற்குமடா
உந்தன் மார்புக் கூட்டுக்குள்ளே
நான் மட்டுமடா
உந்தன் இதழ் முத்தம் வேண்டுமடா
இதயம் வேண்டுமடா
உன் தோள்கள்
எனை மட்டுமே
ஏற்குமடா
உயிர் உடலினை கட்டிக்கொள்வது தான் முறையடா
எனை நீ தானடா கட்டித் தழுவவேண்டுமடா
நீ விடும்
மூச்சு தான்
என் உயிர்மூச்சு
நாளும் சுவாசித்து
வாழ்வேனடா
எந்தன் மரணம்
உந்தன் மடியில்
நொடியில் நடைபெற வேண்டுமடா
~ பிரபாவதி வீரமுத்து
மீராவிற்கோ
உருவம் , பெயர்
தெரியும்
எனக்கோ
உங்களை சுமக்க
மட்டுமே தெரியும்
உயிருக்கு
வேண்டுமா
உருவமும்
பெயரும்
~ பிரபாவதி வீரமுத்து