சங்கப் புலவன் எழுதாத கவிதை

கூடையில் கடைசியாக
துள்ளிய மீனும் அடங்கியது
அமைதியில் மற்ற மீன்களுடன்
காய்ந்தபின் அது
கருவாடு எனும் கவிதை ஆனது
கூடையில் சுமந்து
சந்தைக்கு எடுத்துச் சென்ற போது
அதன் நெடு நல் வாடையில்
எல்லாம் விற்றுப் போனது
சந்தை வாயிலை அடையும் முன்னே !
மகிழ்ச்சியில் வீடு திரும்பிய
மீனச்சி மீனாட்சியின்
கண்களில் கயல்கள் ஆடியது
புன்னகையில்
பாண்டிய நாட்டு மீன்கொடி
வெற்றியில் பறந்தது !
----கவின் சாரலன்

குறிப்பு : நெடு நல் வாடை ---தமிழ்ச் சங்க தலைமைப் புலவன் நக்கீரனாரின்
188 அடிகள் கொண்ட இனிய கவிதை .
அவர் காற்றைப் பற்றி எழுதியிருக்கிறார் . நான் கருவாட்டைப் பற்றி எழுதி
யிருக்கிறேன்.அதுதான் வித்தியாசம்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-16, 9:07 am)
பார்வை : 128

மேலே