யாமொன்றறியோம் பராபரமே
பொதி அவிழ்
தாமரைப் பூவை ஒத்தவள்
இவன் அழகன்
இல்லையென்பதால்
ஒப்பாது போகலாம்
கதிர் மதி ஒளிரும்
மதிக்கும் ஓர் மறு உண்டே!
என் செய்தாளோ ..
கவிஎனைத் தூக்கி எறிந்தவள்
எந்த கவிக்கு (மந்தி )
துணை ஆனாளோ ?..
யாமொன்றறியோம்
பராபரமே !