பொறுமை வேண்டும்

கல்லூரி வாசலிலே
கால் கடுக்க காத்து நின்றேன்
கன்னி உந்தன் முகம் பார்க்க ,
எத்தனை எத்தனை அழகு
முகங்களை பார்க்க மறுத்து
உன் முகம் தேடித் தான்
என் கண்களும் நொந்ததடி

நீ அன்று கல்லூரிக்கு வரவில்லையோ/
என் மனதில் ஒரு சந்தேகம்
எழுந்ததனால் காவலாளியிடம்
கேட்கஆவலுடன் செல்லும் போது
அங்கே அவளும் என்னை விட முந்தி விட்டாள்
காவலாளி சொன்னதும்
ஆகா என்ன ஒரு ஒற்றுமை எங்கள் காதலில்
அவள் நான் நின்றதை
கவனிக்கவில்லை சென்று விட்டாள்

என் கைபேசியில் மணி ஒலித்தது
அவளேதான் அவளேதான்
ஆசையுடன் எடுத்தேன்
அக்கறையுடன் நலம் விசாரித்தாள்
என் மனம் உடனே அவளிடம் இறக்கை கட்டியது
அவள் அழைத்த இடம் சென்றேன்
கண்டதும் அவள் முகம் புன் சிரிப்பில்
அவள் சிரிப்பில் தான் எத்தனை அழகு
அவள் கூறிய வார்த்தை மட்டும்
சுர் என்றுன் நெஞ்சில் தைத்தது

ஏன் என்ன நடந்தது சொல் என்றேன்
நம் காதல் சத்தியம் தான்
என் பெற்றோரை மிஞ்சி
என்னால் உங்களை நெருங்க முடியாது
உங்கள் மதம் வேறு சாதி வேறு
என்பது என் பெற்றோரின் கொதிப்பு
அவர்களை மீறி நான் வருவதற்கு
துணிச்சல் என்னிடம் இல்லை
இதனால் உங்களுக்கும்
பல பிரச்சினைகள் உருவாகலாம்
நீங்கள் என்னை மறந்து விடுங்கள்

உங்களை மனதார நேசித்தேன்
மிக பெரிய ஏமாற்றத்தை கவலையை
அடைகிறேன்
நீங்கள் எனக்கு இல்லை என்றால்
என் ஆயுள் உள்ளவரை
நான் கன்னியாகவே வாழ்வேன்
நீங்கள் இன்றி எனக்கு எதுவும் இல்லை
என் காதல் உண்மை என்றால்
நிச்சயம் ஜெயிப்பேன் காதலில்
நம் விருப்பம் பெற்றோரினால்
நிறைவேற்றப் பட வேண்டும்
பெற்றோரின் ஆசீர்வாதத்துடன்
நம், திருமணம் நடக்கும் நம்புகிறேன்
உங்கள் நம்பிக்கையும் அதுவாக வேண்டும்

நாம் நினைப்பது நடக்க
கடவுளின் அருள் கிடைக்க
என் பெற்றோர்
கொஞ்சம் பொறுமை தேவை
எப்படியும் என் பெற்றோரை
சம்மதிக்க வைத்து விடுவேன்
அதுவரை நமக்குள் தொடரட்டும்
எனக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள்
அவர்கள் என்னையும் நம் காதலையும்
ஏற்றுக் கொள்ளும் காலம்
வெகு விரைவில்
நீங்கள் நம்புங்கள்

நம்புவோம் நம்பும்படி நடப்போம்
காதலென்றால் அது தான்காதல் என்றாள்
நானும் புரிந்து கொண்டேன்
வாழ்வை ரசித்து வாழ
வழி அமைப்போம்
வாழ்வுக்காக காதலிக்க வேண்டும்
காதலுக்காக வாழ வேண்டியதில்லை
எல்லோர் காதலும் வாழ வேண்டும்
மிக மென்மையான காதல் மலர வளர
பொறுமை எனும் நீர் ஊற்ற வேண்டும்
அப்போ வறுமை இல்லாக் காதல்
பெருமையாக இன்பமாக வேரூன்றி விடும்
காதல் மலராக, காண்போம்
இன்பமாக ,இறுக்கமாக இணைவோம்

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Apr-16, 11:24 am)
பார்வை : 158

மேலே