பறவையாகிய பெரு வாழ்வு-சுஜய் ரகு
கிளை நுனியில்
ஒரு பறவை அமர்ந்திருந்தது
அதன் தேடலை
வானத்தில் தூவிக்கொண்டு
கூடற்ற அப்பறவை
விழுங்க வருவதாய்
இலைகளுள் பதுங்கியது
கவியும் அந்தி பார்த்து
பின் புலர்ந்த நிலவை
வெறித்த பறவை
தனிமையின்
அழகியலில் அலகு
நுழைத்து
கொத்தியெடுத்த
வசந்தத்தின் சேகாரங்களை
இந்த பூமியெங்கும்
இறைத்துக்கொண்டே
சிறகடிக்கலானது
அதன் மென் கால்களின்
உந்தலில்
மெள்ளக் காற்றாடும்
சிறு கிளையில்
மறுகணமே
பறவையாகியிருந்தது
என் பெரு வாழ்வு....!