நிழல்

குறைவில்லா சௌகர்யங்களோடு
கூடிய விலைமதிப்புள்ள
நவீனத்துவ முதியோர் மனையொன்றில்
நம்பிக்கைத் தொலைத்து
நிர்க்கதியாக்கப்பட்ட
நண்பர்கள் கூட்டத்துக்கு புதிய
நண்பராகவென்று விட்டுச்செல்லும்
நம்பிக்கையோடு வளர்த்த ஆலமரம்
நிஜம் என்பது நிழலென்பதை
நிரூபித்து விடுகிறது
*மெய்யன் நடராஜ்