காப்பாற்று

காப்பாற்று கடவுளே எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !

பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு பார் பர பரவென்றே எழு
பக்கத்து வீட்டு பையன் கூட போய் விட்டான்
பிடிவாதம் வேண்டாம் போகத்தான் வேண்டும்

பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா ! பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.

.

.
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !

எழுதியவர் : முரளிதரன் (1-May-16, 7:00 pm)
Tanglish : kaappaarru
பார்வை : 92

மேலே