vaishu - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  vaishu
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  20-Feb-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jan-2012
பார்த்தவர்கள்:  2386
புள்ளி:  1006

என்னைப் பற்றி...

-

என் படைப்புகள்
vaishu செய்திகள்
vaishu - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2018 3:43 pm

சௌகார் ஜானகி : The லெஜெண்ட்

பழம்பெரும் நடிகைகளில் இவர் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்துபவர். 1949ல் 'ஷவ்காரு' என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ராமாராவுக்கு இணையாக முதலில் அறிமுகம் ஆனார். நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களைவிட அனுபவத்திலும் வயதிலும் பெரியவர். அவர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாவித்திரி அவர்கள் வாய்ப்பு கேட்டு சென்னைக்கு வந்தார்.

சௌகார் அவர்கள் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் என்றாலும் வீட்டிற்கே ஆசிரியரை வரவைத்து கற்றுக்கொண்டவர். அவுர் பேசும் ஆங்கிலம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓர் ஆங்கில இதழுக்காக அவரை பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் பேட்டி கண்டபோது பல விஷயங்களைப் பேசினார்.

மேலும்

vaishu - எண்ணம் (public)
17-May-2018 8:57 am

தீண்டாமையை எதிர்த்து போராடி, சமபந்தி போஜனங்கள் ஏற்பாடு செய்து, தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்ற சமதர்ம சிந்தனையாளர், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கக்கனை தலைமையேற்க செய்த மஹான் மதுரை வைத்தியநாத ஐயர் பிறந்த தினம் நேற்று  16/5/2018

மேலும்

அருமையான தகவல் . செயற்கரிய செய்த பெரியவரை அவர் பிறந்த தினத்தில் பெருமையுடன் நினைத்துப் பாப்போம் . 17-May-2018 4:29 pm
vaishu - எண்ணம் (public)
16-May-2018 11:17 am

#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்?ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?அனைவரும் படித்து பகிர வேண்டிய பதிவு! 
-----------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.3) அடுத்து, 
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் 
குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC 
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். 
இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் 
பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்.பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 
31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் 
பெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது
45 சதம் ஆகும்.14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!!
குழப்பம் தேவையில்லை!தகுதி பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு உங்கள் உழைப்பிற்கும், குடும்பத்தாரின் அளவிடமுடியாத தியாகங்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் &வாழ்த்துக்கள்!மரு. தி. சு. செல்லக்குமாரசாமி MBBS., MD.,

மேலும்

vaishu - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 9:00 am

நீட் தேர்வுக்கு ஆதரவளித்தால் கெட்டவன் என்ற தோற்றத்தை உருவாக்கப் பலர் முயற்சிக்கிறார்கள். அதில் சிலருக்கு மோடி வெறுப்பு காரணமாக அதைச் செய்கிறார்கள் அவர்களைத் திருத்த முடியாது. ஆனால் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இதை வேண்டுமென்றே மக்களுக்கு எதிரானது போல திரிக்கத் துடிகின்றன.

புதிய தலைமுறை டீவியின் கார்த்திகை செல்வன், குணா , செந்தில் இந்த மூன்று ஓநாய்களும் தனது எசமானுக்கு மிக மிகக் கேவலமாக நாக்கை தொங்கப் போட்டு வேலை செய்வது அப்பட்டமாக இந்த விசயத்தில் தெரிகிறது.
எந்த கட்சி சார்பும் இல்லாத, சமூகத்தின் மீது அக்கறை உள்ள நபர் என்றால் சரி விஷயத்தை மேற்கொண்டு படிக்கவும்.
முதலில் நீட் தேர்வு எதனால் த

மேலும்

vaishu அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2018 8:24 am

பெயர் தான் தமிழ்நாடு.....
தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இது சுடுகாடு*1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி.*
*200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி.*
*வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...*😡😡😡இளைய தலைமுறைகள் கவனிக்க ,,
பிரசன்னா என்ற யோக்கியன் கவனிக்க
காவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங்கள் வரிசையாக

முதல் துரோகம்.
------------------------------
கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.

இரண

மேலும்

நெற்றியில் அடித்தாலும் வயிற்றில் அடிப்பவனை தானே நம்புகிறார்கள்.. 10-May-2018 8:32 am
கண் முன் நடக்கும் துரோகம் தெரிய தான் மாட்டேன் என்கிறதே தமிழக மக்களுக்கு. திமுகவிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் நமக்கு துரோகம் தான் என்பதை அறியமுடியாமல் கிடக்கிறார்களே என்ன செய்வது? 10-May-2018 8:30 am
இவ்வளவையும் தெரிந்த பின்னர் நாம் மீண்டும் அவர்களுக்கு வாக்களித்தால் அது தான் நமது பிறப்பிற்கும் தாய் நாட்டிற்கும் தாய் மொழி துரோகம்....... தெரிந்து புரிந்து நமக்கான நாளையை நாமே வடிவமைப்போம். 07-May-2018 10:47 am
நெத்தியடி 14-Apr-2018 4:06 pm
vaishu அளித்த கேள்வியில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2018 9:08 am

MSV இசையில் தங்களுக்கு பிடித்த பாடல்கள் என்னென்ன? பிடித்தலுக்கான காரணம் கூற முடியுமா?
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

எங்களுக்கு பழைய பாடல்களே பிடிக்காது அல்லது கேட்க மாட்டோம் என நினைக்கிறீங்களா???

மேலும்

மெல்லிசை மன்னரின் இசையில் பல ஆயிரம் பாடல்கள் மனத்தை மயக்குபவை என்றாலும் , "சுமதி என் சுந்தரி" படத்தில் வாலி அவர்களால் எழுதப்பட்ட "' ஒரு தரம் , ஒரே தரம் " என்ற பாட்டில் மெல்லிசை மன்னார் கொண்டுவந்திருக்கும் ஒரு நயமான அமைப்பு காரணமாக இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தில் "ஒருதரம் , ஒரேதரம் (முத்த ) உதவி செய்தால் என்ன பாவம் ?" என்று கேட்கும் கதாநாயகனுக்கு , "பெண்மை என்றால் கண்மறைவாய் மூடி வைத்தால் சுவை இருக்கும்" என்று பதில் சொல்லி அனுமதிக்க மறுக்கும் கதாநாயகி , மீண்டும் மீண்டும் அவன் கேட்பதால் , மனம் சற்று இரங்கி விட்டாள் என்று காட்டுவதைப் போல , பாட்டின் முடிவில் கதாநாயகன் " ஒரு தரம்" என்று மீண்டும் கேட்க , கதாநாயகி , சரி போகட்டும் , ஒரே ஒரு தடவை மட்டும் அனுமதிக்கிறேன் என்று சொல்லும் விதமாய் " ஒரே தரம் " என்று சொல்வதுடன் பாடலை நிறைவு செய்திருப்பார். இதை நான் மிகவும் இரசித்தேன். 01-Apr-2018 6:29 pm
MSV யின் பல பாடல்கள் நம் மனநிலைக்கேற்ப கிடைக்கும் போது, மீண்டும் பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நன்றி.. 01-Apr-2018 9:48 am
அவர் பல்லாயிர பாடல்களை இசையமைத்து தந்திருக்கிறார். அவைகளில் "மயக்கமா.. தயக்கமா.? மமனதிலே கலக்கமா..?" இந்த ஒரு பாடலுக்கு ஈடுஇணை கிடையாது..! காரணம் திரைதுறையில் வாய்ப்பு தேடி சென்னைவந்த கவிஞர் வாய்புக்காக அலைந்தும் கிடைக்காமல் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து டீ குடிக்க வந்தார். அப்போது ரேடியோவில் இந்த பாடல் சிரீனிவாசின் குரலில் ஒலிக்கிறது.! பாடலை கேட்டவர் தன் முடிவை மாற்றி மீண்டும் முயற்சி செய்து பெரும் கவிஞராய் வலம் வந்தார்.. அவர்தான் ரங்கராஜன் என்ற"கவிஞர் வாலி".! அந்த ஒருபாடலினால் வாலியின் மூலம் பல்லாயிர பாடல்கள் பிறந்தன..! இப்போது சொல்லுங்கள்..? 31-Mar-2018 10:38 pm
நன்றி.. 27-Mar-2018 8:42 pm
vaishu - துறைவன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2018 10:04 am

இந்த ஆண்டு மொத்த வங்கி மோசடி ரூபாய்.19,194 கோடி.

மூன்றே மாதங்களில் 2017-ம் ஆண்டை மிஞ்சியது.

தி இந்து - 24/03/2018.

நிலமை இப்படியே போனால் வங்கிகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

மேலும்

2015 கு முன்னாடி வாங்கிய கடன் எல்லாம் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தான் 2017 இல் இருந்து வெளிவருகிறது. நாம் என்னவோ இப்போதான் வாங்கிய மாதிரி கத்திக் கொண்டு இருக்கிறோம். பணமதிப்பிழப்பு தோல்வி என்பதால் இவ்ளோ வருது. இன்னும் வரும்.. 24-Mar-2018 4:24 pm
vaishu - pranavan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 10:21 pm

நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு

என் தேகத்தைக் கூறுபோடு

உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்

அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்

உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்

உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு

எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெ

மேலும்

நான் கிண்டலாக எந்தக் கவிதைக்கும் கருத்துக் கூறுவதில்லை. நல்ல கவிதைகள் கவனத்தைப் பெறுவதில்லை என்பதால் இப்படிச் சொல்ல நேர்ந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் வேண்டுகோளைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன். 02-Jun-2015 4:35 pm
மதிப்பிற்கு நன்றி..நண்பரே..ஆனால் என்னால் இந்த அளவுக்கு எல்லாம் சிந்திக்கக் கூட முடியாது என்பதே உண்மை..தங்கள் அபிமானத்திற்கு நன்றி.வாழ்த்துக்காள் ..தொடர்ந்து முன்னேறி உச்சங்கள் தொட வாழ்த்துக்கள்! 02-Jun-2015 8:25 am
சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் வேந்தன். நீங்களெல்லாம் எழுதும் தளத்தில் நான் எழுதுவதை கவிதை என்று கூட எந்த இடத்திலும் குறிப்பிட்டுக்கொள்வதில்லை.நீங்கள் போய் இப்படியெல்லாம் எழுதலாமா ....நீங்கள்,ராம்வசந்த் ,மற்றும் முகம் பார்க்காமலே அன்னியோன்யம் ஆகிவிட்ட சிலர் பார்த்துவிட்டாலே ஆத்ம திருப்தி அடைந்துவிடுபவன் நான் . இப்போது ராம் வசந்த் இல்லாதது பெரிய மனக்குறை .. மற்ற தளங்களில் நீங்கள் எழுதி இருக்கும் எல்லா கவிதைகளையும் இங்கே போஸ்ட் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . 02-Jun-2015 12:10 am
உங்களை போன்றவர்கள் ஒரு பார்வை பார்த்துச்செல்வதே பாக்கியம் அய்யா 01-Jun-2015 11:53 pm
கனா காண்பவன் அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Apr-2015 2:37 pm

..கல்யாணம் செய்து பாா்..

பொன்னியரிசி முதல்
பொட்டுக் கடலை வரை
விலை அத்துப்படியாகும்.

பவுன் விலை ஏறினால்
பதட்டபடும் முதல் நூறு பேரில்
நீயும் இருப்பாய்.

மாமனாருக்கும் மச்சானுக்கும்
டிக்கெட் புக் செய்வதிலேயே
பாதி இன்டொ்நெட் பேலனஸ்
தீர்ப்பாய்.

திருமணம் செய்துபார்...

உனக்கும்
சமைக்க வரும்.

குறைந்நபட்சம்
உப்பு காரமாவது
சரியான விகிதத்தில்
சோ்ப்பாய்.

அதிகாரியாய்
அலுவலகத்தில்
அதட்டுவாய்-ஆனால்
வெண்டைக்காய்
வாங்க மறந்ததற்கு
வீட்டில் வசவு வாங்குவாய்.

கல்யாணம் செய்து
குழந்தை பெற்று பாா்...
உனக்குள்
தாய்மை குடியேரும்.

தினம் இரண்டு முறை
பள்ளிக்குச் செல்வாய

மேலும்

2 சதவீத கவிதை மிகவும் அருமை... மீதி உள்ள 98 சதவீதத்துக்காக காத்திருக்கிறேன்...... 25-Apr-2018 9:42 am
மிக அருமை.. 07-Mar-2018 4:43 pm
அருமை. 15-Jul-2017 9:00 pm
அருமை நண்பரே 07-Feb-2017 2:58 pm
முரளிதரன் அளித்த படைப்பை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Jul-2014 2:49 pm

சகாதேவன் :

யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான்.

இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் விட்டுட்டு அங்கே ஓடிப்போவான். இருக்கிற காசிலே , அங்கே உதவி செய்கிறவர்களுக்கு, டீ வாங்கிக் கொடுப்பான், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பான். சுமங்கலமோ அமங்கலமோ இல்லை சோகமான பேரிடரோ , சகாவின் உதவிக் கரம் எப்போதுமே நீளும்.

சொல்லப்போனால், அவன்

மேலும்

நன்றி கிருத்திகா தாஸ் ! 16-Jul-2014 7:34 am
அருமையான கதை சார்...!! 15-Jul-2014 6:08 pm
மிக்க நன்றி சகோதரி துர்க்கா! 12-Jul-2014 5:02 pm
வேறுபட்ட இரு கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்துக்கு நல்லதொரு படிப்பினையை வழங்கிய கதாசிரியருக்கு முதலில் என் பாராட்டுக்கள். நகுலனைப் போன்ற பாத்திரங்களே சமூகத்தில் நிரம்பி வழிந்து காணப்படுகின்றன. பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் உதவுவோர் வெகுசிலரே..! அந்தவகையில் அருமையான கதை நகர்த்தலில் படிப்பினையைக் கொடுத்த கதை மிக அருமை. `லாரியும் ஸ்கூட்டரும் நீண்ட நாள் பிரிந்த காதலர் போல சந்தித்துக் கொண்டன. ரொம்ப நெருக்கம்.` ரசிக்கவைத்த நல்ல உவமை. வாழ்த்துக்கள். 12-Jul-2014 3:48 pm
கவிஜி அளித்த படைப்பை (public) கவிஜி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Mar-2015 10:38 pm

உன் பேர் சொல்ல ஆசை தான்....

உள்ளம் உருக ஆசை தான்... உயிரில் கரைய ஆசைதான்....பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்த தாலே..... என்னால் இந்தப் பாடலை இதற்கு மேல் கேட்க முடியவில்லை.... கேட்பதும் கேட்காமல் போவதும் காற்றின் அலைவரிசையின் கொண்டை ஊசி வளைவுகளுக்கு தெரிவதில்லை... இல்லையா...?....அது கணக்கின் விரல் பிடித்து காதுகள் தேடும் சூட்சுமம்.... நான் கூட அப்படித்தான்.... கடிதம் எழுதி துக்கம் கொண்டாடும்... 80களில் பிறந்த ஹிப்பி தலையன்தான்....

இப்படித்தான்.... தொடர்பற்ற சிந்தனையில்... தொடர்பே அற்றவனாக அறுந்து விழுந்து உன் பாதம் தீண்டும் நொடிக்காக தெருக்களின் முக்காக கிடக்கிறேன்.... என்

மேலும்

நன்றி சார்..... 28-Mar-2015 1:41 pm
வசியம் .......காதல் mesmerism ..! 27-Mar-2015 5:57 pm
நன்றி சரோ.... 27-Mar-2015 2:09 pm
புகைப்படங்கள் உயிர்த்தெழுந்து சரி... என்னைக் கொன்றுவிடு... ஆனால் கொஞ்ச நேரம் காதலித்துவிட்டுப் பின் கொன்றுவிடு என யாசிக்கும்... இந்த எழுத்தைப் படித்து... எப்படியும் முன் சாயல் ஒன்று வந்திராத விமரசனத்தைத்தான் பகிர நினைக்கிறேன்.. இருந்தும் மிரட்சிகளின் மிரட்சிகளில் அதுவாகவே வந்துவிடுகிறது. கடவுளி.... ரசித்தேன் ஜி... இடையில் கொஞ்சம் வல்லமை தாராயோவும் வாழ்ந்துவிட்டோ வந்து விட்டோ போயிருக்கிறது... அலைவரிசையா...அமிழ்ந்ததின் வலியா எனத் தெரியவில்லை. இரண்டுக்குமாக சேர்ந்து மகிழ்கிறேன் . நன்றி ஜி... சிறப்பு 26-Mar-2015 9:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (141)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (141)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
கருனபாலன்(தீபக்)

கருனபாலன்(தீபக்)

Native: Cuddalore Working at: Qatar

இவரை பின்தொடர்பவர்கள் (141)

MohR

MohR

Singapore
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
பூக்காரன் கவிதைகள்

பூக்காரன் கவிதைகள்

நீலகிரி - உதகை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே