kokila makan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kokila makan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 330 |
புள்ளி | : 53 |
எதிரே இருக்கும் வீட்டுக்குள்
....எப்படி வந்தது தங்கச்சிலை ?
புதிரின் விளக்கம் பிறகறிந்தேன்
.....பார்த்தது குமரி நின்றநிலை
இருசெவி கேட்கும் ஒலியெல்லாம்
.....இசையாய் இன்று மாறியதேன் ?
கருமுகிற் குழலி இன்மொழிகள்
....காலையில் என்னிடம் கூறியதால்.
செய்யும் செயல்கள் அனைத்திலுமே
.....சிறப்பு இன்று கூடியதேன் ?
மைவிழிப் பாவையின் பார்வையாம்
....மாலையைக் காலையில் சூடியதால்.
எதையும் வெல்ல முடியுமென்னும்
....எண்ணம் வந்தது எப்பொழுது ?
இதழின் ஓரப் புன்னகையால்
....இதயம் அவள்தொட்ட அப்பொழுது
"கவினாள்" இதற்கு சரியான பெயர் விளக்கம் வேண்டும்
சரியான வாழ்க்கை துணையை எவ்வாறு தேர்ந்து எடுப்பது ?
வகுப்பரை கேள்விகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது சரியா? கொண்டாடியிருக்க வேண்டியது தமிழ்ப் புத்தாண்டு அல்லவா?
"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை "
இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால்
இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர் தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமோ என்று ஒரு ஐயம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.
இரண்டு குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் இந்த உறுத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அந்த உறுத்தலைப் போக்கிக் கொள்ள எனக்கு நானே சில சமாதானங்களைச் சொல்லிக் கொண்டேன்.
சமாதானம் 1
------------------------
அந்தக் கால கட
காது கிழிபடும் ஒலியுடன் கத்தி வெட்டுகிறது.
கனிவிட்டுச் சாறு சொட்டுகிறது.
இடிமின்னலுடன் மழை கொட்டுகிறது.
உறுமிக்கொண்டு நரசிங்கம் நகங்களால் இரணியன்
உடலைக் கிழித்திட உதிரம் வழிகிறது.
இடிமின்னலுடன் மழை பொழிகிறது.
கசையடிகள் வாங்கிக் கதறும் கார்மேகத்தின்
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன..
இடி,மின்னல், மழை, நிகழ்வுகள் நடக்கின்றன.
விளக்கம்
1 . கத்தி--------------------------மின்னல்
வெட்டும் ஒலி-----------இடி
சாறு --------------------------மழை
கனி ---------------------------மேகம்
2 .நகம் --------------------------மின்னல்
உறுமும் ஒலி ----------இ
அற்புதமான எழுத்தாளரான கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் பலமுறை
நான் படித்திருக்கிறேன் .வியந்திருக்கிறேன் .
அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்,பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், முப்பதாம் அத்தியாயத்தில் வந்தியத்தேவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் நடக்கும் துவந்த யுத்தத்தை விவரிக்கையில் ஒரு சிறிய தவறு செய்திருக்கிறார் .
" கடோத்கஜனும் இடும்பனும் சண்டை போடுவது போல் போட்டார்கள் "" என்று எழுதியிருக்கிறார் .
கடோத்கஜன் , இடும்பனின் சகோதரி மகன்.
பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த போரில் , இடும்பன் பீமனால் கொல்லப்படுகையில்
தனது சகோதரியை மணம் செய்து கொள்ளுமாறு இடும்பன் பீமனை வேண்ட , அதன் படி
நிலவும் கவிஞனும்
நிலவைப் பற்றிக் கவிதை பாடென
நெஞ்சில் நிறைந்தவள் கேட்டாள்.
நிலவைப் பாடாத கவிஞனே இல்லை
நிலத்தில் என்பதாலா என்று கேட்டேன்.
நிலவைப் பாடாதவன் கவிஞனே இல்லை
என்பதால் கேட்டேன் என்றாள்.
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை "இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால் எதுகைப் பொருத்தம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர், தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?