பொன்னியின் செல்வன்

அற்புதமான எழுத்தாளரான கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் பலமுறை
நான் படித்திருக்கிறேன் .வியந்திருக்கிறேன் .

அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்,பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், முப்பதாம் அத்தியாயத்தில் வந்தியத்தேவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் நடக்கும் துவந்த யுத்தத்தை விவரிக்கையில் ஒரு சிறிய தவறு செய்திருக்கிறார் .

" கடோத்கஜனும் இடும்பனும் சண்டை போடுவது போல் போட்டார்கள் "" என்று எழுதியிருக்கிறார் .

கடோத்கஜன் , இடும்பனின் சகோதரி மகன்.
பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த போரில் , இடும்பன் பீமனால் கொல்லப்படுகையில்
தனது சகோதரியை மணம் செய்து கொள்ளுமாறு இடும்பன் பீமனை வேண்ட , அதன் படி
பீமனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்குப் பிறந்தவன் தான்
கடோத்கஜன்.

அதாவது இடும்பன் இறந்த பின்னர் தான் கடோத்கஜன் பிறக்கிறான்.
அதனால் இடும்பனும் கடோத்கஜனும் சண்டை போட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இந்தத் தவறுக்கு இரண்டு சமாதானங்கள் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .
1 . வழுவமைதி
2 . இல்பொருள் உவமை அணி

இவைகளைத் தவிர வேறு சமாதானங்கள் , தமிழ் இலக்கண மரபுப்படி ,சொல்லுவதற்கு
வாய்ப்பு உள்ளதா?



கேட்டவர் : kokila makan
நாள் : 17-Mar-18, 7:51 pm
0


மேலே