kokila makan- கருத்துகள்
kokila makan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [28]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
நன்றி நண்பரே
நன்றி ,நண்பரே
கவின் என்றால் அழகு என்று பொருள் .
ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது
"" மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்,
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே".
குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் . குறிப்பு கீழே உள்ள பதிவில் முதல் வரி இடம் மாறி விட்டது, அதை சரி செய்ய முடியவில்லை. அதை நீக்கப்பட்ட பதிவாகக் கருதவும்
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
கவின் என்றால் அழகு என்று பொருள் .
ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது
"மகளிர் அன்ன துணையோடு வதியும்,
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே".
குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் .
சரியான வாழ்க்கைத் துணையாக எவ்வாறு நான் அமைவது என்ற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடியுங்கள் .அந்தப் பதிலில் சொல்லப்படும் தகுதியில் குறைந்தது 70 % உங்களிடம் அமையும் வகையில் உங்களைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு வாழ்க்கைத்துணையைத் தேடுங்கள் .சரியான வாழ்க்கைத் துணையை உங்களால் அடையாளம் காண முடியும்.( அவரே உங்களுக்குக் கிடைப்பாரா என்பது வேறு விஷயம். அதை முடிவு செய்யும் காரணிகள் வேறு ) அடையாளம் காண்பதற்கு மட்டுமே இந்த ஆலோசனை .
இருபதை நெருங்கும் பெண்ணின்
...இதயம் தனக்கோ பிறர்க்கோ
வருகிற தடையை எதிர்கொளும்
....வழிவகை கேட்டால், பதில்மொழி
தருவது மூத்தவர் கடமை
.....தப்பித்தல் குறித்து அறியக்
கருதும் பொழுது குட்டு
....கொடுத்தல் தானே முறைமை,
....
கட்டித் தங்கம் நிகர்த்த
......காலம் விரயம் ஆகிட
வெட்டிக் கேள்வி எழுப்பும்
......வீணர் தலையில் பலமாய்க்
குட்டு வைத்தது போலக்
......கொடுத்த கருத்து.கைகளைத்
தட்டி மகிழும் வண்ணம்
.....தந்தது எனக்குள் வேகமே,
""இவை இடையினம் சார்ந்தவை என்பதால் மொழிக்கு முதலில் வராது""
மொழிக்கு முதலில் வராது என்பது சரியே எனினும் , சொல்லப்பட்ட காரணம் தவறு.. இடையினத்தைச் சேர்ந்த "வ" எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
""ல் , ள்" மெய்கள் க..ச..ப..என்றவல்லினங்களுக்கு இடையே வரும்""
இதுவும் தவறான தகவல் .
நல்ல , வல்லமை , வெள்ளம் போன்ற மெல்லின , இடையின எழுத்துக்களுக்கு இடையே வரும்
பல சொற்கள் உள்ளன.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி நண்பரே
மெல்லிசை மன்னரின் இசையில் பல ஆயிரம் பாடல்கள் மனத்தை மயக்குபவை என்றாலும் , "சுமதி
என் சுந்தரி" படத்தில் வாலி அவர்களால் எழுதப்பட்ட "' ஒரு தரம் , ஒரே தரம் " என்ற பாட்டில்
மெல்லிசை மன்னார் கொண்டுவந்திருக்கும் ஒரு நயமான அமைப்பு காரணமாக இந்தப் பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது.
பாட்டின் ஆரம்பத்தில் "ஒருதரம் , ஒரேதரம் (முத்த ) உதவி செய்தால் என்ன பாவம் ?"
என்று கேட்கும் கதாநாயகனுக்கு , "பெண்மை என்றால் கண்மறைவாய் மூடி வைத்தால் சுவை
இருக்கும்" என்று பதில் சொல்லி அனுமதிக்க மறுக்கும் கதாநாயகி , மீண்டும் மீண்டும் அவன்
கேட்பதால் , மனம் சற்று இரங்கி விட்டாள் என்று காட்டுவதைப் போல , பாட்டின் முடிவில்
கதாநாயகன் " ஒரு தரம்" என்று மீண்டும் கேட்க , கதாநாயகி , சரி போகட்டும் , ஒரே ஒரு தடவை
மட்டும் அனுமதிக்கிறேன் என்று சொல்லும் விதமாய் " ஒரே தரம் " என்று சொல்வதுடன் பாடலை
நிறைவு செய்திருப்பார். இதை நான் மிகவும் இரசித்தேன்.
நன்றி நண்பரே
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1 "இலக்கணத்தை மீறிய சொல் இருக்கக் கூடாதா ?"'
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் நம்பிக்கை கொண்டவன் .
சுவை மிக்க , சிறப்பான , புதிய சொற்களை ஏற்றுக் கொள்ளுவதற்கு வழுவமைதி என்ற இலக்கணக் கூறு இருக்கையில் அதை நாம் பயன்படுத்திக் கொண்டு மொழிக்கு வளம் சேர்ப்பதில் எந்தத் தவறுமில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2 . தாய் நாடுன்னு சொல்லாம எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாரதியார் ஏன் சொன்னாரு ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கேள்விக்கு எனது எதிர்க் கேள்விகள்
1 ." செப்பு மொழி பதினெட்டுடையாள் " என்று ஏன் சொன்னார் ?
2 ." தாயின் மணிக்கொடி பாரீர் ""என்று ஏன் சொன்னார்?
3 "பாரதப் பிதா திருப்பள்ளியெழுச்சி" பாடாமல் ""பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி"" என்று ஏன் பாடினார்?
4 . "காளையர் சூழ்ந்த தமிழ்நாடு " என்று பாடாமல் " கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு "" என்று ஏன் பாடினார் ?
இன்னும் பல "" ஏன் "" களை பாரதியார் பாடல்களில் இருந்தே கேட்க முடியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3 .பாரதியார் மூலம் ஆண் உயர்வு என்று காட்டி விட்டேனா ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகபட்சமாக, பெண்ணுக்குச் சமமாகத் தான் ஆணைக் கருதினார் பாரதியார் என்று வைத்துக்
கொள்ளலாமே தவிர பெண்ணை விட ஆண் உயர்வு என்று அவர் கருதியதாக வைத்துக் கொள்ள வழியேயில்லை.
பாராட்டுக்கு நன்றி நண்பரே
Gender Equality என்ற பார்வையில் இந்த இரண்டு சொற்களை ஆய்வு செய்தால் வழக்கம் போலவே
தமிழ் மொழி பெண்ணை ஆணைக் காட்டிலும் உயர்த்திக் காட்டுகிறது.
எனது கருத்திற்கான ஆதாரங்கள்
1 .ஆணியம் என்ற சொல் பொது விதியின் படி உருவாகிறது . ஆனால் பெண்ணியம் என்ற சொல்
பொது விதியோடு இயைந்த சிறப்பு விதியின் படி உருவாகிறது.
2 . ஆண், பெண் இரண்டு சொற்களுக்கும் இரண்டு எழுத்துகளே என்றாலும் ஆணியம் -- 4 எழுத்துக்களும் ; பெண்ணியம் - 5 எழுத்துக்களும் கொண்டுள்ளது . அதாவது மேலோட்டமாகப்
பார்த்தால் இருவரும் சமம் போலத் தெரிந்தாலும் , ஆழ்ந்து நோக்குகையில் ஆணை விடப் பெண்ணே
உயர்ந்தவள்
நன்னூலில் ,மெய்யீற்றின் முன் உயிர் வரின் , என்ன ஆகும் என்பதற்கு இரண்டே விதிகள் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
விதி 1
""உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே""
எடுத்துக்காட்டு
வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்
இது ஆண் + இயம் = ஆணியம் என்பதை நிறுவுகிறது.
விதி 2
""தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்""
எடுத்துக்காட்டு
பொன் + ஒளி = பொன்னொளி
அதனால் பெண் +இயம் = பெண்ணியம் என்பது சரியே என நிறுவப்படுகிறது.
ஆறுமுக நாவலர் அவர்கள் உரையின்படி, விதி 2 , விதி 1 ன் சிறப்பு விதியாகும்
அதனால் ஆணியம் , பெண்ணியம் இரண்டும் இலக்கணப்படி அமைந்த சொற்கள்.
இலக்கண விதிகளின் படி இரண்டு சொற்களிலும் சொல்லமைப்பில் முரண்பாடு எதுவுமில்லை.
ஆண்ணியம் என்பது இலக்கணம் மீறிய சொல் .
விளக்கம் கொடுக்கும் பொழுது , ஆறுமுக நாவலர் அவர்கள் , விதி 2 , ன் படி , நிலைமொழியின் இறுதி மெய் (மெய்யெழுத்து) , வருகின்ற உயிரை ( உயிரெழுத்தை ) ஏற்றுக் கொள்ளுவதுடன், மெய்
( மெய்யெழுத்து ) இரட்டிக்கும் என்று சொல்கிறார்.
இதில் ஒரு நயம் உள்ளது என்று நினைக்கிறேன் . பெண்கள் ஆணின் உயிர்ச்சத்தை ஏற்றுக் கொள்ளுவதுடன் தனது மெய்யிலிருந்து இன்னொரு மெய்யை இரட்டிக்கிறார்கள் என்பதும் இதனால்
உணர்த்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு.
நயம் பற்றிய கருத்து எனது கற்பனையில் உதித்த கருத்து.
நிச்சயம் இது மூல ஆசிரியரின் கருத்தாக இருக்க முடியாது.
அதனால் "பெண்" என்ற சொல் தவிர மற்ற சொற்களுக்கு இந்த நயம் பொருந்தாதே என்று யாரும்
வினா எழுப்ப வேண்டாம். அது எனக்கும் தெரிந்ததே.
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே