முதல் இரவு
காளையும் பாவையும் கூடட்டுமே
..... காமத்துப் பாடலைப் பாடட்டுமே
நாளையும் பொழுதையும் மறக்கட்டுமே
......நாணத்தை இருவரும் துறக்கட்டுமே
ஆடையாய்க் காற்று ஆகட்டுமே
......அச்சங்கள் விட்டுப் போகட்டுமே
சாடையாய் நிலவு காணட்டுமே
......சரசங்கள் கண்டு நாணட்டுமே
மெத்தைகள் இரண்டும் அஞ்சட்டுமே
......மேனிகளைப் பார்த்துக் கெஞ்சட்டுமே
வித்தைகள் யாவும் புரியட்டுமே
......விழிவிட்டு உறக்கம் பிரியட்டுமே
வேர்வையில் மேனிகள் ஊறட்டுமே
......விதிகள் அனைத்தையும் மீறட்டுமே
பார்வையில் சொர்க்கம் தெரியட்டுமே
......படைப்பின் இரகசியம் புரியட்டுமே
மோகத்தின் இராகம் ஒலிக்கட்டுமே
....முத்தத்தின் தாளம் கலக்கட்டுமே
தேகத்தின் தேவைகள் தீரட்டுமே
.....தெய்வத்தின் ஆசியும் சேரட்டுமே
( குறிப்பு :
கர்ணன் படத்தில் வரும் " இரவும் நிலவும் "" பாடலின் தாக்கத்தில் எழுதிய பாடல் )